June 2, 2023

ம் இந்திய சினிமாக்களில் தீவிரவாதி என்றால் முஸ்லீம்கள் என்று காட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சித்தரித்து வந்த வெளியான படங்களின் பட்டியல் மிகப் பெரியது.. இதைக் கவனத்தில் கொண்டு எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு சராசரி முஸ்லிம் இளைஞன் அதிகார வர்க்கத்தினரால் எப்படிப்பட்ட இடர்களுக்கு ஆளாகிறார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்டியிருக்கிறார்கள் தனது முஸ்லீம் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கேட்டபோது அதிர்ச்சி அடைந்ததாகவும் இவையெல்லாம் உண்மையில் நடக்கிறது. இதை நிச்சயம் சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.

எஃப் ஐ ஆர் படத்தின் கதை என்னவென்றால் மெட்ராஸ் ஐஐடி’யில் படித்து கோ0ல்ட் மெடல் வாங்கி வேலை தேடி அலையும் இளைஞர் விஷ்ணு விஷால். முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். . பல இடங்களில் வேலை தேடியும், படித்ததற்கான பணி அவருக்கு கிடைக்காமல் விரக்தி அடைந்த சூழலில் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் கிடைத்த வேலைக்குச் சேர்கிறார் விஷ்ணு விஷால். இச்சூழலில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பொன்று இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்க வைத்து விட்டு. அடுத்ததாக இந்தியாவிற்கும் மிரட்டல் விடுக்கிறது. இதையடுத்து நடந்த விசாரணையில், கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த விஷ்ணு விஷால் அதன் நிறுவனத்திற்காக வாங்கிய கெமிக்கல்கள் வெடிகுண்டு செய்வதற்காககத் தான் வாங்கினார் என்ற யூகத்தில் போலீஸார் அவரை கைது செய்கின்றனர்… மேலும் சாட்சிகளும் தடயங்களும் அவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்பட்ட நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து எப்படி மீண்டார் என்பதே கதை..

நாயகன் விஷ்ணு விஷால் கல்லூரி வாழ்க்கை, வேலை தேடி அலையும் பாங்கு , வாழ்க்கையின் மேல் விரக்தி வெறுமை, அம்மா பாசம், ஆவேசம் என பல கோணங்களில் பல விதமான நடிப்பை ரசிக்கும்படியாக கொடுத்து அசத்தி இருக்கிறார். அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் தனது சிக்ஸ் பேக் உடல்கட்டினைக் கொண்டு எதிரிகளை பந்தாடுவது அபாரம். விஷ்ணு விஷால் திரைப்பயண வரிசையில் இப்படமும் ஒரு ஏணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வரும் ரைசாவிற்கு இப்படம் ஒரு மாறுதலான கதாபாத்திரம் தான். தனது கண் பார்வையிலேயே அசர வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். மஞ்சிமா மோகன் இப்படத்தின் ஓட்டத்திற்கு எவ்விதத்திலும் பலனளிக்காமல் வந்தார் சென்றார் என்பது சோகமே

விஷ்ணு விஷாலின் ஜோடியாக வரும் ரெபா மோனிகா, ஒரு பாடலுக்கு மட்டும் எட்டிப் பார்த்துச் செல்கிறார். அதன் பிறகு க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து மிரட்டுகிறார். கொடுத்த காட்சிகளில் பளிச் என மிளிர்கிறார் மோனிகா. உளவுத்துறை
அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன் சரியான தேர்வு தான் என்றாலும், ஒரே அறையில் மீட்டிங்க் மீட்டிங்க் என்று நடத்தி சதியை முறியடிப்பதெல்லாம் நம்பகத் தன்மையில்லாமல் இருக்கிறது

அஷ்வத் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசையில் தனி முத்திரை பதித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங் ஷார்ப்தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.

ஆனாலும் இதற்கு முன்னரே சில பல தமிழ் படங்களில் வந்த கதைதான் என்றாலும், இந்த எஃப் ஐ ஆரில் வேகம், மேக்கிங், ட்விட்ஸ், அதிரடி, செண்டிமெண்ட், தர்க்கவாதம் என பல இடங்களில் தனது தனித் திறமையை வெளிக்காட்டிய இயக்குனர் மனு ஆனந்த்-துக்கு ஸ்பெஷல் பொக்கே. அதிலும் க்ளைமாக்ஸில் வரும் காட்சிகளுக்கு எக்ஸ்ட்ரா கைத்தட்ட தோன்றியது. .

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே தீவிரவாத அமைப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலருக்கும் சவுக்கடி கொடுத்து இந்திய தேசம் என்பது ஒன்றே அதை உயிர் கொடுத்து காக்கும் அனைவரும் இந்நாட்டின் மன்னனே என்று உரக்கக் கூறியுள்ள பத்தை சகலரும் பார்க்கலாம்

மொத்தத்தில் எஃப் ஐ ஆர் – .அட சொல்ல வைக்கும் சினிமா பட்டியலில் இணைந்து விட்டது

மார்க் 3.5/ 5