ரேட்டிங்கில் கோல்மால் – அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்!
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் எப்போதும், அந்த பொருளை ஏற்கெனவே வாங்கி உபயோகித்தவர்களின் ரேட்டிங்கை வைத்தே முடிவெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி கொடுக்கப்படும் ரிவ்யூக்களை போலியாக உருவாக்கி ரிவ்யூ விதிகளை மீறியதாக அமேசான் 600 சீன பிராண்டுகளுக்கு தடை விதித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது Review கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கியது கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் இருந்து கடந்த ஓரிரு நாளில் சில பிரபல டெக் அக்சஸரி மேக்கர்கள் மற்றும் அவர்களது ப்ராடக்ட்கள் மறைந்து போயுள்ளன. இதற்கு காரணம் அவற்றை அமேசான் நிறுவனம் நீக்கி இருக்கிறது. அமேசான் தனது வெப்சைட்டிலிருந்து சுமார் 600 சீன பிராண்டுகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தடை செய்யப்பட்டுள்ள சீன பிராண்டுகளை சப்போர்ட் செய்த சுமார் 3,000 வணிகர்களின் அக்கவுன்ட்களை அமேசான் க்ளோஸ் செய்து இருக்கிறது. இந்த அதிரடி நடவடிக்கையை போலி ரிவியூக்கள் மற்றும் பிற பாலிசி மீறல்களுக்கு எதிராக அமேசான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த போது தி மார்னிங் கான்டெக்ஸ்ட்’ தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த செய்தி நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து, ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், அமேசானின் இந்திய சட்ட குழு, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அமேசான், அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணையைத் துவக்கியுள்ளது.இந்த விவகாரத்தில், அதன் மூத்த நிறுவன ஆலோசகர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும், குற்றச்சாட்டு குறித்த விரிவான தகவல்களையோ அல்லது விசாரணை எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பதையோ தெரிவிக்க இயலாது என, அமேசான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள பதிலில் ‘‘எவ்விதமான ஊழல் மற்றும் சட்ட விரோதமான பணிகளும் அமேசானில் இடமில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முறையாக ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விசாரணை குறித்து எவ்விதமான தகவல்களையும் தற்போது அளிக்க முடியாது’’ என அமேசான் அறிவித்துள்ளது.
அமேசான் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “ஊழலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். முறையற்ற செயல்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அவற்றை முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம். இந்த நேரத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்லது எந்த விசாரணையின் நிலை பற்றியும் நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.