அனைவரும் அர்ச்சகராகலாம்..!- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

ஆகம விதிகளை கற்றுத் தேர்ச்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சேலம் சுகவனேஸ்வர் கோயில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து, அந்த கோயிலின் அர்ச்சகரான முத்துசுப்பிரமணிய குருக்கள் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்தை உறுதி செய்து, தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துசுப்பிரமணி குருக்கள் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், முத்து சுப்பிரமணிய குருக்களின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சேலம் சுகவனேஸ்வர காேயில் அர்ச்சகர் முத்துசுப்பிரமணிய குருக்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , கோயில் ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்த யாரும், எந்த சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறினர். மேலும் முத்துசுப்பிரமணிய குருக்களின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.