ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு : கமல் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு : கமல் போட்டி?

காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் சூழலில் கமல்ஹாசன் அத்தொகுதியில் போட்டியிட முடிவு என்றும் தகவல் பரவுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அத்தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதை அடுத்து நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் , கமல்ஹாசனும் அங்கு போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இச்சூழலில்  ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்று தலைமை தேர்தல் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி பொருத்த வரை 2.28,402 வாக்காளர்கள் உள்ளனர்.அதாவது இந்த தொகுதியில் மத்திய ஈரோடு பகுதி, )ஈரோடு நகரம், காவேரி கரை ஓரத்தில் இருக்கும் சில பகுதி மற்றும் மொடக்குறிச்சி கிழக்கு பகுதியில் இருக்கும் சில பகுதி எல்லாம் இந்த தொகுதி கீழ் வருகிறது. இங்கு கொங்கு வெள்ளாளர் கவுண்டர், செங்குந்தர் முதலியார்கள் ஆகிய ரெண்டு சமூகமும் 60% மக்கள் உள்ளனர்.. அதாவது 1,45000 மக்கள் உள்ளனர். அருந்ததி மக்கள் 11% உள்ளனர் தோராயமாக 30,000உள்ளனர் .. தெலுங்கு பேசக்கூடிய நாயுடு மற்றும் கன்னட மக்கள் 15% தோராயமாக 30,000 உள்ளனர். அத்துடன் சிறுபான்மை மக்கள் குறைந்தது 20,000 பேர் உள்ளனர்.. மேலே சொன்ன அனைத்தும் 2011 மக்கள் தொகை கணக்கை பொறுத்து தான் சொல்லப்பட்டது.

இப்பொழுது வெற்றி பெற்ற வேட்பாளர்கள். 2011- அதிமுக +தே மு தி க –சந்திரகுமார் சுமார் 50% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. அவர் இப்பொது திமுகவில் உள்ளார். 2016- அதிமுக வை சார்ந்த தென்னரசு வெற்றி பெற்றுள்ளார் -43% வாக்குகள் பெற்று உள்ளார்.. 2021-காங்கிரஸ் +திமுக சார்ந்த திருமகன் 44% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்…! 2021இல் NDA கூட்டணியில் இந்த தொகுதி கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் ஒதுக்கப்பட்டது . யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் நின்று தோற்றார் அவர் பெற்ற வாக்குகள் 58396. கிட்ட திட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்றார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர்.ஆக.. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது…!இந்நிலையில்தான் இத்தொகுதியில் கமல் போட்டியிட திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

நிலவளம் ரெங்கராஜன்

 

Related Posts

error: Content is protected !!