இந்தியாவில் 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்துக்கு ஆபத்து?
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எப் பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்துள்ளது.
ஏற்கனவே தற்போது பி எப் வட்டி விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் 8.1%-மாக குறைந்துள்ள நிலையில், அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டு இழப்பு காரணமாக வட்டிவிகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இங்கு பலர் அதானி யின் முறைகேடுகள் குறித்த கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் அவர்களின் பி.எப் தொகையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.