கொரோனா தொற்று : டோலோ 650 மாத்திரைகளின் விற்பனை ரூ.567 கோடி!

கொரோனா தொற்று : டோலோ 650 மாத்திரைகளின் விற்பனை ரூ.567 கோடி!

ம் நாட்டில் கொரோனா தொற்று பரவிய மார்ச் 2020 தொடங்கி டோலோ 650 மாத்திரைகளின் விற்பனை ரூ.567 கோடியை கடந்த எட்டியிருக்கிறது என்ற தகவல் பல தரப்பிலும் ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது.

கொரோனா காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, தலை வலிக்கு தீர்வாக ‘பாரசிட்டமால்’ மாத்திரைகள் மருந்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. ‘பாரசிட்டமால்’ என்பதுதான் வேதியியல் பெயர். இதை சந்தைப்படுத்தும்போது ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு வெவ்வேறு பெயர்கள், பிராண்ட் நேம்களை சூட்டிக் கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் டோலோ, கால்பால் (calpol) பிராண்டுகளை மருத்துவர்கள் அதிகமாக பரிந்துரை செய்ததாக ஐ.க்யூ.வி.ஐ.ஏ(IQVIA) என்ற சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிகின்றது. 2021 டிசம்பர் மாதம் டோலோ 650 பிராண்டின் விற்பனை ரூ.28.9 கோடியை ஏட்டியது. இதன் மூலம் டிசம்பர் 2021-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிராண்டாக டோலோ 650 மாறியுள்ளது. கொரோனா காலத்தில் டோலோ 650 மாத்திரைகளின் மொத்த விற்பனை ரூ.567 கோடியை கடந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை அடைந்த ஏப்ரல் 2021 கால்போல் (calpol) பிராண்டின் விற்பனை ரூ.71.6 கோடியாக இருந்தது. இதன் மூலம் கொரோனா இரண்டாம் அலையின்போது அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிராண்டாக கால்போல் மாறியது. எல்லா வயதினருக்கும் பொருத்தமாக இருப்பதாலும், குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாலும் டோலோ 650-யை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரை செய்கிறார்கள்.

மேலும் இதய நோய், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உற்கொள்ள பாதுகாப்பான மருந்தாக இதை மருத்துவர்கள் கருதுகிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் டோலோ 650 தயாரிக்கிறது. 1973-ம் ஆண்டு, ஜி.சி சுரனா என்பவரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது அவரது மகன் திலிப் சுரனா இந்நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனத்தின் வருடாந்தர விற்பனை ரூ 2,700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!