அதிகாரத்தில் இருப்பவர் சம்பந்தம் இல்லாமல் கண்ணைக் கசக்குவது ஏன் தெரியுமா?

அதிகாரத்தில் இருப்பவர் சம்பந்தம் இல்லாமல் கண்ணைக் கசக்குவது ஏன் தெரியுமா?

திசை திருப்புவது- அதிகாரத்தின் தந்திரம். பேச்சும் அழுகையும் அதற்குத்தான்!

ஹிட்லர் அப்படி அழுதவன்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பல குற்றங்களுக்காக இன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுபவர். தண்டனை தரும் நீதிபதிகளில் ஒருவர் ‘ கறுப்புப் பெண்மணி’ ஆதலால், டிரம்ப் ‘வெள்ளை-கறுப்பு’ பகைமைகளை மெல்லத் தூண்டுகிறார்.

திசை திருப்புவதற்கு இது உதாரணம். படித்த முட்டாள்களும், வெள்ளை அகம்பாவத்தை அடிமனதில் தேக்கி வைத்திருப்பவர்களும் திசை திருப்பும் நாடகத்தின் ரசிகர்கள்!

இந்தியாவில் பிரச்சினையைத் திசை திருப்ப அதிகாரத்துக்குக் கிடைத்த பெயர் ‘நேரு’!

நம்மைப் பொறுத்தவரை தியாகம், உழைப்பு இவற்றின் அடையாளங்கள்- நேருவும் காந்தியும்.

நேரு 9 முறை கைதாகிச் சிறை சென்றவர்; ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் வாடியவர்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் மட்டும் 4 முறை கைதாகி, ஒன்றரை ஆண்டு சிறையில் கழித்தவர்.

இந்தியாவில் பல முறை கைதாகி 6 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்.

இருவரும் நேர்வழியில் நடந்தவர்கள்; திசை திருப்பும் பேச்சும் இல்லை. அழுகையும் இல்லை.

இன்று அதிகாரத்தில் இருப்பவர் சம்பந்த சம்பந்தம் இல்லாமல் கண்ணைக் கசக்கி மூக்கைத் துடைக்கிறார் என்றால் ஆபத்தும் துயரமும் வெகு அருகில் என்பதுதானே அர்த்தம்!

ச.மாடசாமி

error: Content is protected !!