June 7, 2023

வாரிசு அரசியல் போய் குடும்ப அரசியல் – திமுக எம் எல் ஏ கு.க.செல்வம் பேட்டி= வீடியோ!

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி யில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதால் கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என செல்வத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இன்று சென்னை கமலாலயம் வந்த கு.க. செல்வம் மீடியாக்களைச் சந்தித்த போது, ‘திமுகவிலிருந்து என்னை தற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள். நிரந்தரமாக நீக்கினாலும் அதுகுறித்து நான் கவலைப்படப் போவதில்லை. பொதுமக்களுக்கு உழைப்ப தற்காக சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். திமுகவில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்பதற்காக ஆகவில்லை. எம்.ஜி.ஆர், ஜானகி, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரின் தலைமையில் 50 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளில் பணியாற்றியுள்ளேன். 2014ஆம் ஆண்டு திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கேட்டேன். அப்போது, சமாதானம் செய்து ஜெ. அன்பழகனை மாவட்டச் செயலாளர் ஆக்கினார்கள். அவர் இறந்த பிறகாவது எனக்குத் தருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், சிற்றரசு என்பவரை நியமித்துவிட்டார்கள். திமுகவில் வாரிசு அரசியல் போய் தற்போது குடும்ப அரசியல் வந்துவிட்டது” என்று கூறினார்.

ஆனால் நான் நான் கடவுள் பக்தி கொண்டவன் என்ற அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்தேன். அதன்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேன். பாஜக தலைவர்களை சந்திக்கிறீர்களே திமுகவில் இருந்து நீக்க மாட்டார்களா? என்று பத்திரிகை யாளர்கள் கேட்டனர்..தைரியமிருந்தால் நீக்கிக் கொள்ளுங்கள் என பதில் அளித்திருந்தேன். இப்போது திமுக கொடுத்த அறிக்கையை இதுவரை நான் பார்க்கவில்லை. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, திமுக கொடுத்துள்ள அறிக்கையை பொறுமையாக படித்து பார்த்துவிட்டு திமுக-விற்கு நிச்சயம் விளக்கம் தருவேன்” என்றார்