திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை சாராம்சங்கள்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை சாராம்சங்கள்!

மிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நேற்று முன்தினம் இரவு முடித்த திமுக, அக்கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 12) வெளியிட்டது. இந்நிலையில், இன்று (மார்ச் 13) திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், “திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நான் வெளியிட்டேன். திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுவதில் பெருமையடைகிறேன். திமுக தேர்தல் அறிக்கையை தேர்தல் கதாநாயகன் எனச் சொல்வதுண்டு. ஆனால், வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொல்கின்றனர். இன்று இரண்டாவது கதாநாயகனை வெளியிடுகிறேன்.

திமுக தோன்றியதிலிருந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக் கிறோம். 1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் அண்ணா அன்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனை வாக்குறுதிகளாகத் தருவோருக்கு ஆதரவு என்று அறிவித்தார். இந்த அறிக்கைகள் தனிப்பட்ட கட்சியின் விருப்பமாக அல்லாமல், தமிழக மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

திமுக போட்டியிட்ட முதல் தேர்தலின்போது, நெடுஞ்செழியன் தலைமையிலான குழு, பயணம் செய்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோல், டி.ஆர்.பாலு தலைமையில் இம்முறை குழு அமைக்கப்பட்டு, அக்குழு தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் அறிக்கையைத் தயாரித்தது. அக்குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி. அவர்கள் மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கின்றனர். பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இவை பேசப்படும். தமிழ்நாட்டின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வாக்குறுதிகளாக இருக்கின்றன” எனப் பேசினார்.

இதை அடுத்து திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை துரை முருகன், டி.ஆர் பாலு பெற்றுக்கொண்டனர்.

இதில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள்:

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வற்புறுத்துவோம்.

* கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.

* முதல்வரின் நேரடிகட்டுபாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதி ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும்.

* அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடும்.

* பொங்கல் திருநாளில் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

* சென்னையில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.

* கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் மேம்பாடு அடையும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது .

* கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டைகுடும்ப அட்டைதாரர்கள் வைத்துள்ளவர்களுக்கு நிவாரண தொகையாகரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

* அனைத்து தரப்பு மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 வரை குறைக்கப்படும்.

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

* மாதம் ஒருமுறை மின்கட்டணம் கட்டும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

* நியாய விலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

* அரசு வேலை வாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்த 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பங்களுக்குரூ.1 கோடி வழங்கப்படும்.

* பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்கும் வகையில் கலைஞர் சிறப்பு வீட்டு வசதிகள் திட்டம் கொண்டு வரப்படும்.

* நகர்புறங்களில்ஆட்சேபனை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு குடியிருக்க வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.

* கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.

* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதை தவிர்க்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

* அனைத்து கிராமங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

* கடலோர மாவட்டங்களில் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப் படும்.

* மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

* கிராமப்புற பூசாரிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

* இந்து ஆலயங்கள் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு நடத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து தரப்படும்.

* மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ள 205 அர்ச்சகர்களுக்கு உடனடி பணி நியமனம் செய்யப்படும்.

* 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு உதவித் தொகை ரூ.1.500 ஆக உயர்த்தப்படும்.

* 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளி கள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.

* ஏழை மக்கள் பசி தீர 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.

* நடைபாதை வாசிகள் தங்க இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.

* சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணியாளர்களாகபணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

* கலைஞர் காப்பீட்டு திட்டம், வரும் முன் காப்போம் திட்டம் மேம்படுத்தப்படும்.

* தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசு அடையாமல் காக்க ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்.

* இயற்கை எரிவாயுவில் இயங்ககூடிய பேருந்துகள் சென்னை மாநகர பகுதியில் இயக்கப்படும்.

* கொரோனா தொற்றால்உயிரிழந்த மருத்துவர்கள், அரசுஊழியர்கள், முன்கள பணியாளர் களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

* பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* ஊட்டசத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுகூடை திட்டம் அமல்படுத்தப்படும்.

* பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறை நலன்காக்க ஆணையம் அமைக்கப்படும்.

* பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

* சிறுகுறு விவசாயியகள் புதிய மின்மோட்டார் வழங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.

* ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாகஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் தரப்படும்.

* மகளிருக்காக பேறுகாலஉதவி தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய கழக ஆட்சி அமைந்தவுடனேயே சட்டப்பேரவையை கூட்டி சட்டம் இயற்றப்படும்

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

* வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்களின் திறன் பயிற்சி அலுவலகமாக மாற்றப் படும். 50 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

*அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பபடும். புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் விழுக்காடு வேலை வாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

* அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப் படும் .இதை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்.

* வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.20லட்சம் வரை கடன் வசதி செய்து தரப்படும்.

* அரசு பெண் ஊழியர்களுக்குபேறு கால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

* சிறப்பு தாய் சேய் நல திட்டத்தால் கருவுற்ற பெண்ககளுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.

* புதிதாக தனி கனிம வளஅமைச்சம் அமைக்கப்படும். தாதுமணல், மணல் அனைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.

* அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டே்டாவுடன் டேப் வழங்கப்படும்.

* கல்வி நிறுவனங்களில் வைபை வசதி செய்து தரப்படும்.

* அரசு துறைகளில் 10 ஆண்டுகள் மேல் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.

* போக்குவரத்து தொழிலார்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.

* நெல்குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்று ரூ.4ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.

* உழவர் சந்தைகளுக்கு உயிருட்டப்பட்டு அனைத்து நகரங்களக்கு விரிவுப்படுத்தப்படும்.

* நீர் பாசனத்துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

* நீர் மேலாண்மை ஆணையம் அமைந்திடம் சட்டம் உருவாக்கப்படும்.10ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும்.ரூ.2 ஆயிரம் கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

* ஏழை எளிய சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன்சுமையை சீர் செய்ய பொருளாதார உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

* மீனவர் சமுதாய பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநதித்துவம் வழங்கப்படும்.

* முன்னாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறு இழைத்தவர்கள் யாராயினும் சட்டநடவடிக்கைக்குஉள்ளாக்கப்படுவார்கள்.

* அரசியல்அமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநில பட்டியலில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.

* மத்திய அரசு பள்ளிகள்உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்படும்.

* சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சென்னை பெருநகர வெள்ளதடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

* வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

* இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

* தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

* இலங்கையில்நடந்த இனப்படுகொலையை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்தியாவில் வசிக்கும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பேண வெளிநாடுகள் வாழ் தமிழர்கள் துறை ஏற்படுத்தப்படும்

* மீனவர்களுக்க 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.

* அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாப்கின் வழங்கப்படும்.ஃ

* பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் இதர பிறப்படுத்தப்பட்டோரக்கான வருமான உச்சவரம்பு ரூ.25 லட்மசாக உயர்த்த மத்திய அரசசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.

* ஆதிதிராவிடர் பழங்குடியிடினருக்கான காலி பணியிடங்கள் நிரப்பபடும்.

* நரிக்குறவர்கள்,குருவிக்கார்கள், லம்பாடி ஆகியோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.க்ஷ

* மாற்றுத்திறனாளிகளுக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாற்று த்திறனாளிகளுக்க கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்படும். மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

* வடலூர் வள்ளலார் பெயரில் சர்வதே மையம் அமைக்கப்படும்.

* புகழ் பெற்ற இந்து கோயில்களுக்க ஆண்மீக சுற்றுலாக செல்ல ஒருலட்சம் பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

*பக்கிங்காம் கால்வாய் சீரமைககப்படும்.

* சென்னை சிறுசேரி பகுதில் நவீன பேருந்த நிலையம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் ரயில் பாதை அமகை–்க வலியுறுத்துவோம். திருச்சி -மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

* வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

* பள்ளி மாணவர்களக்கு காலையில் ஊட்டசத்தாக பால் வழங்கப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

* 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* மகளிர் சுய உதவி குழுவில் கூட்டுறவு வங்களில் உள்ள கடன் தள்ளுபடிெ சய்யப்படும்.

* அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கன கட்டணமில்லா பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என பெயரிடப்படும்.

தலைவர் கலைஞர் புகழ் பெற்ற வாசகம் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அவரது வழியில் நானும் சொன்னதை செய்வதை செய்வேன். செய்வதை தான் சொல்வேன் என்பதை தமிழக மக்களுக்கு இந்த நேரத்தில் உறுதி மொழியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட மாட்டாது

இதன் பின்னர் மு.க.ஸ்டாலினிடம், “திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப் படுமா” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மு.க.ஸ்டாலின் பதிலளிக்கை யில், “தற்போதுள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது. தொடர்ந்து அவர்கள் பணியில் இருப்பார்கள். மக்கள் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் விரைவாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

 

error: Content is protected !!