விஜயகாந்த்- தின் தேமுதிக சேரப்போவது அதிமுக அணியிலா?திமுக அணியிலா?

விஜயகாந்த்- தின் தேமுதிக சேரப்போவது அதிமுக அணியிலா?திமுக அணியிலா?

பார்லிமெண்ட் தேர்தல் கூட்டணி கடிகளுடன் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அன்றாடம் ஈடுபட்டுள்ளன. இந்த இரண்டு அணியிலும் அன்றாடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறதாம் முன்னதாக தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அதோடு உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகித இடங்களும் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அதிமுக கூட்டணியை தேமுதிக நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

தேய்ந்து போன தே.மு.தி.க.,விற்கு, ராஜ்யசபா எம்.பி., ‘சீட்’ வழங்க அ.தி.மு.க.,வில், அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. .ஏற்கெனவே அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை இணைக்க நடந்த பேச்சில், பா.ம.க.,வை விட அடிசினலாக ஒரு தொகுதி கேட்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க. மறுத்து விட்டது. இதையடுத்து, தே.மு.தி.க., தரப்பில், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவி; இடைத்தேர்தல் சட்டசபை தொகுதிகளில், நான்கு; உள்ளாட்சி தேர்தலில், ஒரு மேயர் பதவி வேண்டும் என, கேட்கப்பட்டு உள்ளது.நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவி வழங்க, அ.தி.மு.க., முன்வந்துள்ளது. இதை அறிந்த அமைச்சர்கள், ராஜ்யசபா பதவி வழங்க, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே விஜய்காந்த் மச்சான் சுதிஷை தினமும் நள்ளிரவில் சந்திக்கும் சபரீசன் தேமுதிக திமுக அணி பக்கம் இழுக்கும் நோக்கில் கொடுக்கும் பல்வேறு டிப்ஸ் அடிப்படை காரணமாக கூட்டணி பேச்சில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது என்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தேமுதிக-வினால எந்த பிரயோஜனமும் இல்லை என்று இரு தரப்பிலும் முக்கிய புள்ளிகள் முணுமுணுப்பதாகவும் தகவல் வருகிரது.

ஆனாலும் இதுபற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும், இன்று தீர்வு காணப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ”தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு, சுமூகமாக நடந்து வருகிறது; எந்த இழுபறியும் இல்லை. ஓரிரு தினங்களில் நல்ல சந்தோஷமான முடிவு எட்டப்படும்,” என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!