Exclusive

தீபாவளி பண்டிகை கால சிறப்பு விரைவு ர‌யி‌ல் விபரங்கள்!

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் வந்தவர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வது வாடிக்கை.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், வைகை, குருவாயூர் என பல ரயில்கள் தினசரியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயிலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், எழும்பூரில் இருந்து நாளை 9ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 11.15க்கு வந்து சேரும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இது நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி சந்திப்பு இடையே எழும்பூர் வழியாக நவம்பர் 8, 15, 12 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது (06051) மறுநாள் காலை 11.45க்கு திருநெல்வேலிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பின்னர் மறுமார்க்கமாக திருநெல்வேலி – சென்ட்ரல் இடையே (நவ.9, 16, 23) ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06052) மறுநாள் அதிகாலை 3.45க்கு (எழும்பூர் வழியாகவே ) சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக பண்டிகை கால சிறப்பு விரைவு ர‌யி‌ல் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 06069/06970 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 10-11-2023, 17-11-2023, 24-11-2023 ஆகிய மூன்று நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் மாலை 3-00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 09-11-2023, 16-11-2023, 23-11-2023 ஆகிய மூன்று நாட்களில் (வியாழக்கிழமை) மாலை 6-45 மணிக்கு புறப்படும்.

இந்த சிறப்பு விரைவு ரயிலில்

AC Two Tier – 1
AC Three Tier – 6
SL Class – 9
GS (UR) – 4
சரக்கு பெட்டி – 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி – 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

1 hour ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

3 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

7 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

8 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

11 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

11 hours ago

This website uses cookies.