‘‘விவாகரத்து பெற்ற இஸ்லாமியப் பெண் பென்சன் வாங்கலாம்’’: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

‘‘விவாகரத்து பெற்ற இஸ்லாமியப் பெண் பென்சன் வாங்கலாம்’’: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

விவாகரத்துப் பெற்ற இஸ்லாமிய பெண்களும், முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125ல் பராமரிப்புத் தொகை பெற முடியும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 ஆனது, பராமரிப்புத் தொகை உள்பட மனைவிகளின் உரிமைகள் என்பது, எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல், அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும் என்பதை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்று தெலுங்கானா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முஸ்லிம் நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் நபரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முஸ்லிம் பெண், பராமரிப்புத் தொகை கேட்பது, விவகாரத்து தொடர்பான உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி முடியாது என்று வாதிட்டார். இதனை சுப்ரீம் கோர்ட் மறுத்து, பொதுச் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண் பராமரிப்புத் தொகை கோரலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, இஸ்லாமிய பெண்கள் விவகாரத்தில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ மீறும் வகையில் இல்லை என்றும், பராமரிப்புத் தொகை பெற ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது.மேலும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறுகையில், விவகாரத்து பெற்ற மனைவிக்கு பராமரிப்புத் தொகை அளிப்பது தொண்டு போன்றது ஒன்றும் அல்ல, அது திருமணமான பெண்ணின் அடிப்படை உரிமை. மதங்களைக் கடந்து, பாலின சமத்துவத்தைக் கொண்டுவரவும், பெண்களும் பொருளாதார பாதுகாப்புப் பெறவும் இது வழிவகை செய்கிறது .

முஸ்லிம் நபர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதோடு, சட்டப்பிரிவு 125 ஆனது, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளது

error: Content is protected !!