என் தாதா 87 படக் கருவை திருப்புட்டாங்கோ!- டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி ஆவேசம்!

என் தாதா 87 படக் கருவை திருப்புட்டாங்கோ!- டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி ஆவேசம்!

2019ஆம் வருடம் கதையின் நாயகனாக சாருஹாசன், மற்றும் ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தாதா 87’. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தயாரித்து இயக்கியிருந்தார். தற்போது அந்த தாதா 87 திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஒன் பை டூ’ என்கிற பெயரில் நடிகர் சாய்குமார் நடிக்க உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் தன்னிடம் இதற்கான உரிய அனுமதியைப் பெறவில்லை என்பதால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்… “கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. தற்சமயம் பவுடர் , பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன்.

அண்மையில் YouTubel  ஒன்றில் நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் ‘தாதா 87’ படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள்.

இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன் 1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள்

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்

Related Posts

error: Content is protected !!