நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள ‘டைரி’ படம் இன்று ரிலீஸாகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. டிமான்ட்டி காலனி, பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது ‘டைரி’ எனும் தலைப்பில் உருவாகி உள்ள படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இதனை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர் கோப்ரா படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றி உள்ளார் என தெரிகிறது. இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்துள்ளார்.
இந்த ‘டைரி’ படத்தின் அனுபவம் குறித்து கேட்ட போது நாயகன் அருள்நிதி சொன்னவை இதுதான்,
“கோலிவுட்டில் த்ரில்லர் கதை என்றாலே என் பெயர்தான் இயக்குனர்களுக்கு நினைவு வருகிறது போலும். ஆனால், இந்தப்படம் 2019 இல் ஒப்புக் கொண்டது. கொரோனா பிரச்சினைகளுக்கு பின் இப்போது வெளியாகிறது. அதற்குப் பின் ஒப்புக்கொண்ட படங்கள் தான் டி பிளாக்கும், தேஜாவு வும். இப்போது வரிசையாக இந்தப்படங்கள் வெளியாவதால் வரிசையாக த்ரில்லர் படங்களில் நான் நடிப்பது போல தோன்றுகிறது. இனிமேல் தொடர்ந்து இப்படியான படங்களில் நடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன். அதேபோல் கதைக்குத் தேவையில்லாமல் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொள்வதில்லை…!” என்றார்.
படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் பேசுகையில், ‘ஊட்டி மலைப் பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில் தொடர்ந்து விபத்துகள் நடக்க அது குறித்து ஆராய வரும் காவல் அதிகாரி அருள்நிதிக்கு ஏற்படும் திரில் அனுபவங்களைத்தான் கதையாகச் சொல்லி இருக்கிறேன். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. எது நிஜம், எது கிராபிக்ஸ் என்று தெரியாது. ஒரு பஸ் செட் ஒன்றைப் போட்டு படமெடுத்தோம். படம் மீது கொண்ட நம்பிக்கையில் தயாரிப்பாளர் கதிரேசன் சார் நிறைய செலவு செய்து விட்டார். சின்ன படமாக ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமாக்கி விட்டது டைரி..!” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “கதை மீது கொண்ட நம்பிக்கையால் பட்ஜெட் குறித்து கவலைப் படவில்லை. எங்கள் பேனரில் வரும் படங்கள் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். அதைக் காப்பாற்றுவோம்..!” என்றார்.
முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…
நம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில்…
கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர்…
இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத்…
அமித்ஷா ஆதரவாளரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்தவீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு 1983-இல் கிரிக்கெட்…
சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை…
This website uses cookies.