டெல்லி துணை முதல்வர் & அமைச்சர் ராஜினாமா ஏற்பு!நெக்ஸ்ட்?

டெல்லி துணை முதல்வர் & அமைச்சர் ராஜினாமா ஏற்பு!நெக்ஸ்ட்?

மோடியின் பாஜக அரசு அதிரடியால் மதுபானக் கொள்கை முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவை தொடர்ந்து அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ராஜினாமாவையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.!

டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மனீஷ் சிசோடியா, டெல்லி துணை முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.

இந்த மனீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி அமைச்சர்களுக்குள் ஒருவரான சத்யேந்தர் ஜெயினை கடந்தாண்டு மே மாதம், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்து வந்த நிலையிலும், டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கைதான சத்யேந்தர் சிங், மனீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இருவரின் ராஜினாமாவையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

தற்போது, டெல்லி உள்ளாட்சி ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், மத்தியில் செல்வாக்கு இருப்பதாக ந்மபும் பாஜக தரப்பில் கடும் நெருக்கடி உருவாகலாம் என கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!