சில மொபைல் செயலிகள் மூலம், பணம் பறிபோக வாய்ப்பு!- ஸ்டேட் பேங்க் எச்சரிக்கை!

சில மொபைல் செயலிகள் மூலம், பணம் பறிபோக வாய்ப்பு!- ஸ்டேட் பேங்க்  எச்சரிக்கை!

சில மொபைல் செயலிகள் மூலம், பணம் பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI ) தனது வாடிக்கையாளர்களுக்கு 4 செயலிகளில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் அவர்களின் கணக்கில் பணம் பறிபோகலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், இந்த நான்கு செயலிகளால், 150 வாடிக்கையாளர்கள் 70 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.

4 செயலிகள் எது?

இதுபோன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது கணக்கு வைத்திருப்பவர்களை, தங்கள் மொபைல் போன்களில் AnyDesk, Quick Support, Teamviewer மற்றும் Mingleview செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மற்றும் அறியப்படாத எந்த மூலத்திலிருந்தும் யுபிஐ சேகரிப்பு கோரிக்கை அல்லது கியூஆர் குறியீட்டை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. SBI (பாரத ஸ்டேட் வங்கி) என்ற பெயரில், அரை டஜன் போலி வலைத்தளங்கள் இயங்குவதால், தெரியாத இணையதளத்திலிருந்து உதவி போன் எண்ணைத் தேடாதீர்கள்.

எந்தவொரு தீர்விற்கும் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு மட்டுமே சென்று உங்கள் தகவலை சரியாகப் பார்க்கவும். ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் பிறகு, வங்கி ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறது என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீங்கள் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால் உடனடியாக அந்த செய்தியை எஸ்எம்எஸ் -ல் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பவும் என்றும் தெரிவித்துள்ளது.