ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை ரூ.995 ஆக நிர்ணயம்!

ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை ரூ.995 ஆக நிர்ணயம்!

ம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அதே சமயம் கோவிட் 2வது அலையால் அதிகரித்துவரும் நோய் தொற்று பரவலில் இருந்து தப்பிக்க, மேலும் சில தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி, 3வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து முதல்கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இந்த மாதம் துவக்கத்தில் இந்தியா வந்தடைந்தன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கோவிட் 19 வைரஸுக்கு எதிராக 91.6 சதவீத செயல்திறனை கொண்டதாக கூறப்படுகிறது,அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை இந்தியாவில் ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சோதனை முயற்சியாக நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் உள்ள கஸ்டம் பார்மா சர்வீசஸ் (Custom Pharma Services) நிறுவன தலைவர் தீபக் சாப்ரா, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

error: Content is protected !!