“என்ன சொல்லப் போகிறாய்”! -முக்கோண காதல் கதை!!

“என்ன சொல்லப் போகிறாய்”!  -முக்கோண காதல் கதை!!

“குக் வித் கோமாளி” தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை, கொள்ளை கொண்ட அஷ்வின், வெள்ளித்திரையில் நாயகனாக தனது பயணத்தை துவங்கவுள்ளார். அவர் முதன்மை நாயகனாக நடிக்கவுள்ள இப்புதிய திரைப்படத்திற்கு “என்ன சொல்லப் போகிறாய்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். olx, Flipkart, Apollo Hospitals, Sony Music போன்ற பல முன்னனி நிறுவன விளம்பர படங்களையும், புகழ்பெற்ற இணையதொடரான Ctrl Alt Del தொடரை இயக்கிய ஹரிஹரன் A இத்திரைப்படத்தினை இயக்குகிறார். நகர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஜூலை 19 அன்று துவங்கவுள்ளது. முன்னமே ஆரம்பிக்கப்படவேண்டிய இப்படப்பிடிப்பு, கோவிட் பொது முடக்க காரணங்களால் தவிர்க்கமுடியாமல் தள்ளிவைக்கப்பட்டது, என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஹரிஹரன் A.

மேலும் இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஹரிஹரன் A. கூறியது…

நான் இந்த திரைக்கதை எழுதி முடித்தவுடன் Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரனிடம் இக்கதையை கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. அவர் தான் அஷ்வின் இக்கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கூறினார். எனக்கும் அது கச்சிதமாக இருக்கும் என்று தோன்றியது. அஷ்வின் மிகவும் அழகானவர், கவர்ச்சிகரமானவர். உணர்ச்சிகளை மிகவும் எளிதாக வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர் AR ரஹ்மானின் மிகப்பிரபலமான பாடலான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என்ன சொல்லப் போகிறாய்” பாடல் இப்படத்தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பு கதையின் பல விசயங்களை அழகாக வெளிப்படுத்துவதாக இருந்தது. இப்பாடல் எனக்கு மிகமிகப் பிடித்த பாடலும் கூட, இப்படம் “மின்சார கனவு, உன்னாலே உன்னாலே” படங்களை போல அழகான காதல் படமாக இருக்கும். அதே சமயம் அப்படங்களை போல் இப்படத்தின் கதையும் முக்கோண காதல் கதையா எனக் கேட்டால்.. ஆம் இப்படம் ஒரு முக்கோண காதல் கதை தான், ஆனால் அதைத் தாண்டி இப்போதைக்கு படத்தின் கதை பற்றி எதுவும் கூற முடியாது. விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் இப்படத்தில் காமெடியனாக மட்டுமல்லாமல் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகி தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் .

கல் ராமன் co-producer, ரிச்சர்ட் M நாதன் படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்ள, விவேக் மெர்வின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். G.துரை ராஜ் கலை இயக்கம் செய்ய, JA மதிவதனன் படத்தொகுப்பு செய்கிறார்.

error: Content is protected !!