பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்!

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காவின் செல்போனும், வாட்ஸ் -அப்பில் ஊடுருவிய இஸ்ரேல் மென்பொருள் மூலம் ஹேக் (hacked) செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 1,400 பேரின் தகவல்களை கடந்த மே மாதம் திருடியுள்ளதாகவும், இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடக்கம் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கூறியிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, பிரியங்காவின் செல்போனும் ஹேக் செய்யப்பட்டதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறது என்றார்.

மம்தா பானர்ஜி, பிரபுல் படேலின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் காலத்தில் பிரியங்காவின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என்று கூறிய சுர்ஜேவாலா, இந்த விவகாரத்தில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்தார்.

Related Posts