மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

ஓரிரு வருஷங்களுக்கு முன்னாடியே  ருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்  நீதிபதி என்.கிருபாகரன் , அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல், வழக்குமன்றத்துக்குத் தொடர்ந்து வரும் இதே போன்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து பயன்தரத்தக்க கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

edit aug 10

 அதாவது பெண் குழந்தைகளைப் பாரமாக தற்போதும் கருதுகின்றனர். மகளைத் திருமணம் செய்யப் போகும் ஆண் குறித்து முறையாக விசாரிக்காமல், திருமணம் என்ற பெயரில் பெண்களை வெளியேற்றுகின்றனர். பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைவு பிரதான காரணமாகச் சொல்லப்படுகின்றன. மண முறிவும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றுதான். ஆண்மைக்குறைவு, பெண்ணுக்கு மலட்டுத்தன்மை இருப்பதால் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது.

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டால் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள், எய்ட்ஸ் மற்றும் எச்.அய்.வி. தொற்று உள்ளவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்க முடியும். இதுபோன்ற நபர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது தொடர்பாக மருத்துவமனைகள், நீதிமன்றங்களில் இருந்து புள்ளி விவரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்ய வேண்டும். இப்பிரச்சினையில் மக்கள் நலன் கருதி, நீதிமன்றத்தின் சில கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

அதன்படி ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் திருமணங்கள் தோல்வி அடைவது தெரியுமா? இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படுமா?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையைக் காரணமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து வழக்குகளை, தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது ஓர் ஆண்டில் முடிக்க ஏன் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரவில்லை?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட வருக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு ஏன் விதிகள் கொண்டுவரவில்லை?

இப்பிரச்சினையைத் தடுக்க, மேற்கொண்ட பிற நடவடிக்கைகள் என்ன? ஆகிய நான்கு கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செப். 5-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறியிருந்தார்.

அது அப்போது சில மீடியாக்களில் மூன்று கால செய்தியாக வெளியானதைத் தாண்டி  வேறு ரியாக்சன் ஏதும் நிகழவில்லை. இதனிடையே தற்போதும் திருமணத்துக்கு முன்பு மண மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அதே சென்னை ஐகோர்ட்டின் அதே ஜடஜ்  கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை இதயநோய், புற்றுநோய் இருப் பதை மறைத்து தம்மை திருமண செய்து கொண்ட கணவனிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஓர் இளம்பெண் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு உத்தரவிடக்கோரி அவளது கணவர் வேறொரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கக் கோரி அந்தப் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இருவரும் நன்கு படித்தவர்கள். திருமணம் முடித்து சில மாதங்களிலே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். திருமணம் முடிந்து தேனிலவுக்குப் போனபோதுதான் கணவர் நோய் வாய்ப்பட்டவர் என அந்தப் பெண்ணுக்கு தெரியவருகிறது. ஏராளமான கனவுகளுடன் திருமண பந்தத்துக்குள் நுழைந்த அப் பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்பட் டிருக்கிறது. பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான் அவளது கணவனுக்கு இதயத்தில் ஓட்டையும், காலில் தொடைப் பகுதியில் புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது.

இனிமேலும் அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று உறுதியாக தெரிந்த பிறகு வேறுவழியில் லாமல் விவாகரத்து முடிவுக்கு வந்த அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் இருப் பதை மறைத்து திருமணம் செய்து கொண்டதால் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளார்.

அவளது கணவருக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அநீதி இழைக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவரது மனு ஏற்கப்பட்டு, அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அவளது கணவர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

எனவே, திருமணத்துக்கு முன்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களில் விளம்பரம், குறும்படம், கல்லூரிகளில் கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!