தமிழகத்தின் ஒவ்வொரு மாவடத்திலும் ‘அம்மா – இ -கிராமம்!- -எடப்பாடி அறிவிப்பு

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடத்திலும் ‘அம்மா – இ -கிராமம்!- -எடப்பாடி அறிவிப்பு

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ‘அம்மா இ-கிராமம்’ என உருவாக்கப்படும் என்றும் அதில் வைஃபை, ஸ்மார்ட் தெருவிளக்கு, டெலி மருத்துவம், கல்வி ஆகிய வசதிகள் இடம் பெறும் என்றும் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

நேற்று சட்டசபையில் 110ம் விதியின் கீழ் அவர் வெளியிட்ட ஸ்டேட்மெண்டில், “சென்னை ராயபுரம், முட்டுக் காட்டில் உள்ள மீன்வள பல் கலைக்கழக வளாகத்தில் மீன் வள பயிற்சி மையங்கள் ரூ.13 கோடியே 80 லட்சத்தில் அமைக் கப்படும். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் இந்த ஆண்டு ‘மீன்வள வணிக மேலாண்மை’ என்ற எம்பிஏ படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவர். கடல்சார் உயிர் தொழில்நுட்பம், மீன்வள மருந்தியல் முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் படகு சவாரி, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.10 கோடியில் மணக்குடி சூழல் பூங்கா அமைக்கப்படும்.

சென்னை சேத்துப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு, 5 அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளது. கீழ்பாக்கம் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிகளை கருத்தில்கொண்டு இரு நிறுவனங்களும் வருவாயை பகிர்ந்து கொள்ளும் வகையில் கூடுதல் தளங்கள் கட்டப்படும். மாதவரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் தேசிய வண்ணமீன் வானவில் பேரங்காடி அமைக்கப்படும்.

தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பின் 3-ம் கட்ட செயல்பாடுகள், 2017 முதல் 2022 வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.437 கோடியே 96 லட்சத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்மா இ-கிராமம்’ என ஒரு கிராமம் தேர்வு செய்யப்படும். அந்த கிராமத்துக்கு தகவல் தொழில்நுட்ப வசதியை கொண்ட வைஃபை, ஸ்மார்ட் தெருவிளக்குகள், டெலி மருத்துவம், கல்வி போன்ற சேவைகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை ஆப்டிகல் பைபரில் இணைத்து பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு சென்றடைய மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைத்து, அவரவர் இல்லங்களுக்கு அருகி லேயே தமிழக அரசின் பல்வேறு சேவைகளை இணையம் மூலம் பெறும் வகையில், ‘தமிழ்நெட்’ என்ற திட்டத்தை அரசு செயல் படுத்தும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர பினருக்கு இலவச வீட்டுமனை. தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் கிராமப்புற, நகர்ப்புற பயனாளி களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும். கிராம பெண்கள் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் மிக பிற்படுத்தப்பட்டோர், சீ்ர்மரபினர் மாணவியர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும்”இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

error: Content is protected !!