Exclusive

“சித்தா – இது சர்வதேச படம்“- நடிகர் சித்தார்த் நம்பிக்கை!

டிகர் சித்தார்த், தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தா’ . சித்தார்த்துடன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் இப்படத்திலிருந்து வெளியான ‘கண்கள் ஏதோ‘ என்ற முதல் பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியானது. நடிகர் கார்த்தி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சித்தா திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நான்கு மொழிகளிலும் நடிகர் சித்தார் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் குறித்து டைரக்டர் அருண் குமார் கூறும்போது, “சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள்தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் நடப்பது போல் தயாராகி இருக்கிறது. உண்மையைச்ச் சொல்வதென்றால் சித்தார்த் சாரை மனதில் வைத்து தான் இந்த கதையை நான் எழுதினேன். இதற்கு முன்பு நான் இப்படி செய்ததில்லை. படம் பண்ணலாம் என்று பேசினோம், அதன் பிறகு அவர் அட்வான்ஸ் கொடுத்தார். பிறகு தான் இந்த கதையை நான் எழுதினேன். இது கடத்தல் திரில்லர் ஜானர் கதை என்றாலும் இதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்தில் நடக்கும் சம்பவத்தை முழுவதும் ஜஸ்ட் சினிமா என்று அப்ரோச் செய்யாமல், தனிப்பட்ட வாழ்க்கை முறையோடு தொடர்பு படுத்திக் கொள்வது போல் உருவாக்கியிருக்கிறேன். ஒரு குழந்தை காணாமல் போகிறது, அந்த சம்பவத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதறிப்போகிறது, பிறகு அது ஒன்றாக சேர்வது எவ்வளவு சிரமம் என்ற ரீதியில் கதை நகரும். படம் பார்க்கும் போது, வில்லன் மீதோ அல்லது வேறு எங்கோ உங்கள் கவனம் இருக்காது, அந்த சம்பவம்த்தை நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்பு படித்திக்கொள்வது போல தான் இருக்கும். இப்படி ஒரு கதை எழுத ஒரு சம்பவம் அல்ல, நம் சமூகத்தில் நடந்த பல சம்பவங்கள் தூண்டுதலாக இருந்தது.

சித்தார்த் – நிமிஷா இடையிலான அழகான காதல் இருக்கிறது, சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டம் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஒரு இயல்பான கதையை இதுவரை சொல்லாத வடிவில் சொல்லியிருக்கிறேன். இந்த கதையை எழுதும் போதே, எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், அவருடன் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும், அப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எழுதினேன். அதனல், இந்த படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.” என்றார்.

இதே சித்தா படம் குறித்து ஹீரோ & புரொடியூசர் சித்தார்த் கூறுகையில், “ஹீரோவுக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள் தான் கதை, ஆனால், அதை மட்டுமே கதையாக சொல்லாமால், சமூகத்தில் நடக்கும் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு அதற்கு எந்தவித ஒப்பனையும் இன்றி, அப்படியே மிக அழகான ஒரு உலகத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். இது சர்வதேச படம், வெளியான பிறகு நிச்சயம் பல விவாதங்களை ஏற்படுத்தும். அதுமட்டும் அல்ல, இந்த படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்த பிறகு அவர்களுடன் நான் விவாதம் நடத்த இருக்கிறேன். அதனால், இந்த படத்தை பலருக்கு நாங்கள் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளோம். தற்போது நாங்கள் யாரை மதிக்கிறோமோ, யாரை எல்லாம் பார்த்து பயப்படுகிறோமோ, அவர்களுக்கு எல்லாம் படத்தை போட்டு காட்டி விட்டோம், அவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி விட்டார்கள். அவர்கள் யார்? என்று இப்போது சொல்ல மாட்டேன். தயாரிப்பாளர் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால் . நானே இந்த படத்தில் புதிதாக தெரிகிறேன். நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 21 வது வருடத்தில் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அருண் குமார் என்னை மீண்டும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார், என்று சொல்லும் அளவுக்கு படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிக முக்கியமானது. நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் நாளில் எப்படி நடித்தாரோ, அதே போல் தான் இறுதி நாள் வரை நடித்தார். எந்த ஒரு இடத்திலும் ஏற்றம் இறக்கம் இல்லாமல், அந்த கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டிருந்தார். அதை பார்த்து நான் வியந்து விட்டேன். அதற்கு காரணம் நாங்கள் படத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சி தான். இந்த படத்தில் நான், நிமிஷா, அஞ்சலி நாயர் போன்றவர்கள் தான் சினிமா அனுபவம் உள்ளவர்கள். ஆனால், மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் இதுவரை எந்த ஒரு கேமரா அனுபவமும் இல்லாதவர்கள், அவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பதோடு, ஒரு காட்சியில் அல்ல ஒரு வசனம் பேசி நடித்திருப்பவர்களுக்கு கூட முறையான பயிற்சி அளித்து நடிக்க வைத்திருக்கிறோம்.

10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து இந்த படத்தை பார்ப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை படத்துடன் தொடர்பு படுத்திக்கொள்வது போல் கதை நகரும், அதன் பிறகு படம் உங்களை கட்டிப்போடும் விதத்தில் பயணிக்கும், ஒரு நிமிடம் கூட நீங்கள் கவனம் சிதறாமல் படத்துடன் பயணிப்பீர்கள். இதை விட ஒரு நல்ல படத்தை இனி எடுக்க முடியாது, இப்படி நான் சொல்வது உங்களுக்கு அதிகம் பேசுவது போல் இருக்கும். ஆனால், படத்தை நீங்கள் பார்த்த பிறகு, இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு இவங்க ஏன் இப்படி அடக்கி வாசிச்சாங்க என்று நினைப்பீர்கள், அப்படி ஒரு படமாக ‘சித்தா’ இருக்கும்.” என்றார்.

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

2 hours ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

3 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

7 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

8 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

11 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

12 hours ago

This website uses cookies.