அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட ஆணை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட ஆணை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள சீன தூதரகத்தைக் காலி செய்யுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக வளாகத்தில் ஆவணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறி தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்‌ அழைக்கப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹூஸ்டன் காவல்துறையும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகை வெளிவந்ததைப் பார்க்க முடிந்தது எனவும் எனினும், தாங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

சீன நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் அரசுக்காக உளவு பார்ப்பதாகக் கூறி சமீபத்தில் டிக் டாக்கை தடை செய்யுமாறு செனேட்டர்கள் குழு பரிந்துரை செய்தது. சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஆய்வகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பணி புரிந்த சீனர்கள் பலர், முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களையும் ஆய்வு மாதிரிகளையும் திருடுவதாக கைது செய்யப்பட்டனர். தற்போது கோவிட்-19 வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்த ஆய்வத் தகவல்களைச் சீனா ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சிப்பதாக வேறு அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அமெரிக்கா சார்பில் எந்த அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதனிடையே அமெரிக்க அரசு தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் தனது முதல் உத்தரவுப்படி 72 மணி நேரத்தில் சீனர் தூதரகத்தை மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதை அடுத்துசீனா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பெய்ஜிங் நகரில் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் வாங்வென்பின் எச்சரித்தார்.அமெரிக்க அரசின் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!