சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்!- முழு விபரம்!

சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்!- முழு விபரம்!

த்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் அமித்ஷாவுக்கு நெருக்கமானவருமான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என பாஜக இன்று தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதாவது மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இங்கு 45 ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையியில் பாஜக கூடுதல் இடங்களை வென்று அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலை ஒப்பிடும்போது 33 தொகுதிகளை காங்கிரஸ் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது. இதன்மூலம் சத்தீஸ்கரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று ராய்ப்பூரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் பதவிக்கு பாஜகவின் ராமன் சிங், ராம்விச்சார் நேதம், சரோஜ் பாண்டே, அருண் சாவ், ஓ.பி.சௌத்ரி, மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. ஆனாலும் விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் விஷ்ணு தியோ சாய் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு வயது 59.

இவர் கடந்த 1990, 1993 ஆண்டுகளில் தாப்காரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக செயல்பட்டார். அதன்பிறகு 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று எம்பியாக இருந்தார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் எஃகு, கனிமம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைன் இணை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2020 முதல் 2022ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டார் என்பதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க்கது

error: Content is protected !!