சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் -.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் -.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

‘வந்தே பாரத்’ எனப்படும் அதிவிரைவு ரயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர் வரவேற்பால் தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து திருச்சி, விருதுநகர் வழியாக திருநெல்வேலி வந்தடைந்தது. வந்தே பாரத் ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக 160 கி.மீ தூரம் தள்ளி உள்ள விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 160 கி.மீ தூரமுள்ள திருச்சியிலும் தான் நிற்கும். அதேபோல, அதற்கு அடுத்து 105 கி.மீ தூரமுள்ள திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகரில் நிற்கும். ஒரே நாளில் நெல்லை, சென்னை இடையே பேருந்தில் சென்றடைய முடியாது. சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழு அரை மணி நேரத்தில் செல்வதால் இதற்கு மிகப் பெரிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

இந்த ரயிலில் 540 பயணிகள் பயணம் செய்யலாம். 52 பேர் பயணிக்கக்கூடிய ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 பேர் பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும் திங்கட்கிழமை இருந்து வழக்கமாக சேவை தொடங்கப்படும்.

சென்னை – நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சாதாரண சேர் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும்போதை பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும்.

அதன்படி, உணவு, ஜிஎஸ்டி முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி சேர் எனப்படும் எக்ஸிகியூட்டிவ் சேர்  பெட்டியில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். எந்த பக்கமும் இருக்கையை திருப்பி கொள்ளும் வசதி உள்ளது. ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த சொகுசு வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் கட்டணம் அதிகமாகும். சாதாரண சேர் கார் பெட்டியில் இருப்பதைவிட அதில் கூடுதலாக பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது.   இதில், முன்பதிவு கட்டணம், உணவு, ஜிஎஸ்டி என அனைத்தும் அடங்கும்.

ரயிலில் ஒலிப்பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவு பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கிறது. வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!