அஞ்சல் துறை சென்னை மையத்தில் கார் ஓட்டுநர் பணிவாய்ப்பு!

அஞ்சல் துறை சென்னை மையத்தில் கார் ஓட்டுநர் பணிவாய்ப்பு!

கார் டிரைவிங் கற்ற நிலையில் நல்ல வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி. குறிப்பாக நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். நீங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போது, இந்திய அஞ்சல் துறையில் ஒரு பணிவாய்ப்பை பெறுவதற்கான அருமையான வாய்ப்பு உள்ளது. .

காலியிட விவரம்

மத்தியப் பகுதி: 1 காலியிடம்

MMS, சென்னை: 15 காலியிடங்கள்

தெற்குப் பகுதி: 4 காலியிடங்கள்

மேற்குப் பகுதி: 5 காலியிடங்கள்

மொத்தப் பதவிகள்: 25 காலியிடங்கள்

தகுதிகள்:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். கூடுதலாக, இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் இயக்கவியல் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பள வரம்பு

இந்திய அஞ்சல் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​நீங்கள் மாதச் சம்பளம் ரூ.19,900 பெறுவீர்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

பிப்ரவரி 8

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி.

மூத்த மேலாளர் ,

மெயில் மோட்டார் சேவை,

எண். 37, கிரீம்ஸ் சாலை,

சென்னை – 600006.

error: Content is protected !!