கனரா பேங்க் -கின் கேன்பின் நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்!

கனரா பேங்க் -கின்  கேன்பின்  நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்!

கேன்பின் ஹோம்ஸ் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனமாகும். இது வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதை பிரத்யேகமாக செய்து வருகிறது. 1987ல் வீடு இல்லாதவர்களுக்கான சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது தொடங்கப் பட்டது.இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள கேன்பின் நிறுவனத்தில் மேலாளர் பிரிவில் காலியாக இருக்கும் 20 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதர தேவைகள்: பட்டப் படிப்பை முடித்த பின்னர் குறைந்தபட்சம் 3 வருட காலம் பணியாற்றிய அனுபவம் தேவைப்படும். இதில் இரண்டு வருட காலத்திற்கு ஏதாவது ஒரு வீட்டு வசதிப் பிரிவில் கிளை அல்லது பிரிவுத் தலைவராகப் பணியாற்றியிருக்க வேண்டும். கடன் பேப்பர்களை பரிசீலித்தது, கிரெடிட் புரொபோசல்களைப் பரிசீலித்த அனுபவம் தேவைப்படும்.

கூடுதல்  தகவல்கள்: மேற்கண்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலாளர் அல்லது முதுநிலை மேலாளராக பணி புரிய வேண்டும். இதற்கு ஒரு வருட காலம் புரொபேஷன் இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பக் கட்டணம் ; 100 ரூபாய். இதனை நெப்ட் அல்லது ஆர்.டி.ஜி.எஸ்., முறையில் கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்தின் கரண்ட் அக்கவுண்ட் எண். 0684201001486, Canara Bank, Lalbagh West branch, Bangalore IFSC Code -CNRB0000684 என்ற முறையில் செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2017 நவ., 23.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!