தமிழ்நாடு: காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடத்திற்கு மாநிலங்களவைத் தேர்தல்!

தமிழ்நாடு: காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடத்திற்கு மாநிலங்களவைத் தேர்தல்!

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில், மாநிலங்களவை தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன், ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை, செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் கலியாக உள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து, அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 23-ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!