சீனாவால் மறுபடியும் முதலில் இருந்து ..! ; கவலை தெரிவித்த WHO தலைவர்

சீனாவால் மறுபடியும் முதலில் இருந்து ..! ; கவலை தெரிவித்த WHO தலைவர்

கொஞ்ச காலமாக அடங்கி விட்டதாக நம்பிக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கவலை தெரிவித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு வருஷங்களை கடந்த பின்னரும் சீனாவும், கொரோனாவும் மறுபடியும் இன்டர்நேஷபனல் அளவில் தலைப்பு செய்திகளாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளன. இந்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், முககவசம், தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அங்கு, உருவமாறிய BF.7 என்ற கொரோனா பரவுவதாக பெருந்தொற்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை BF.7 மாறுபாடு தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன. அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், சீனாவின் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சீனாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ்,, “உலகில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது சில நாடுகளில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலையளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது” என்றார்.

உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும்.

இந்தத் தொற்றால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது. அங்கு இதுவரை சரியாக 10 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் இறந்துள்ளனர்.

error: Content is protected !!