தொழிலதிபர் சச்சின் நாயகனாக அறிமுகமாகும் ‘ யார் இவன்’ பிரஸ் மீட் ஸ்டில்ஸ்!
பிரபல இந்திய தொழிலதிபர்களுள் ஒருவரான சச்சின் நடிக்கும் தமிழ்ப்படம் யார் இவன். வெண்ணிலா கபடி குழு உட்பட மூன்று தமிழ்ப்படங்களை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து இயக்கிய சென்னைக்காரர் டி சத்யா, முதன் முதலாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம் யார் இவன்.
விளையாட்டுப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் தான் யார் இவன்… ப்ரோ கபடி வீரராக சச்சின் நடிக்கிறார்… தனது ரசிகையையே காதலிக்கிறார்… ஒரு கொலை நடக்கிறது… அந்தச் சூழ்நிலைகளில் இருந்து தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்கிறார் என்பது தான் கதை..” என்கிறார்கள்.
மேலும் சச்சின் தன் எட்டு வயதிலே நடிக்க வந்தவராம். நடிப்பு தன் மூச்சாம் என்றவர் பணம் என்னிடம் நிறைய இருக்கு அதேபோல கலை தாகமும் அதிகம் அது தான் இந்த யார் இவன் , இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்பதில் எனக்கு சிறிதும் அச்சம் இல்லை காரணம் இயக்குனர் சத்யா அந்த அளவுக்கு மிக சிறந்த திரைகதை அமைத்துள்ளார் என்று நம்பிக்கையுடம் தெரிவித்தார்..