பபூன் – விமர்சனம்!

பபூன் – விமர்சனம்!

பபூன் என்ற டைட்டிலைப் பார்த்ததும் ‘அப்பாடா.. படத்தைப் பார்த்து வாய் விட்டு சிரிச்சு ரிலாக்ஸாகி வரலாம்’ என்ற எண்ணத்தில்தான் தியேட்டருக்குள் போய் அமர்ந்தோம். எதிர்பார்த்தபடி தொடக்க காட்சி கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பித்தாலும் போகப் போக போதைபொருள் கடத்தல், அரசியல், இலங்கைப் பிரச்னை, அகதிகள் வாழ்க்கைச் சோகம், பழிவாங்கல் என்று படம் வேறு ரூட்டில் மசாலாத்தனத்துக்கே திசை திரும்புகிறது. ஆனாலும் படுமோசமில்லை.

அதாவது தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டவன். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழிதான் படத்தின் ஒன் லைன். கதை, கொஞ்சம் விரிவாக சொல்வதனாஅல் நாடகங்களில் பபூன் வேடம் போடும் வைபவ், அத்தொழிலை விட்டு விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். அப்படி வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க லாரி ஓட்டுநர் வேலைக்குச் செல்கிறார். அப்போது அவர் ஓட்டிவந்த வண்டியில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உருவாகிறது. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்வதுதா இந்த பபூன் படம்.

வைபவ் நாடகக் கோமாளி வேடத்துக்கு பொருந்த்தமாக இருக்கிறார். பயப்பட வேண்டிய காட்சிகளிலும் பதறாமல் இருக்கிறார். வைபவின் நண்பணாக படம் முழுக்க வருகிறார் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா. ஈழத்தமிழ் அகதிப் பெண்ணாக நாயகி அனகா நடித்திருக்கிறார்.அரசியல் தலைவர்களாக வரும் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோர் தற்கால அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் தமிழரசன் அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். எல்லோரும் தேடும் பெரும்புள்ளி வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மிரட்டுகிறார். தினேஷ்

புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கடற்கரை ஓரங்களை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. சந்தோஷ்நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். காவல்துறை அதிகாரியை தட்டிக்கேட்கும் நாயகி, கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே திட்டிக்கொள்ளும் வைபவ். இப்படியான பலமிக்க பல காட்சிகளை அமைத்துள்ள இயக்குநர் அசோக்வீரப்பனுக்கு பாராட்டுக்கள்.

ஆனாலும் டைட்டில் தொடங்கி எதிலும் முழுமை இல்லாத திரைக்கதையால் அரைவேக்காடுத்தனமாய் இருக்கிறது

மார்க் 2.75/5

Related Posts