பார்லிமெண்டில் தாக்கலாகும் பட்ஜெட் “சூட்கேஸ்” பற்றிய சுவாரஸ்ய ரிப்போர்ட்!
இன்று தாக்கலான் நம்ம இந்தியா யூனியன் பட்ஜெட் பற்றி கொஞ்சம் இண்டரஸ்டிங்கான பாரம்பரிய ஃபாலோ அப் ரிப்போர்ட்-டை ஒரு தபா பார்ப்போமா?. இந்த பட்ஜெட் அப்படீன்னதும், வருமான வரி விலக்கு, வரி விதிப்பு, சிகரெட் விலை ஏற்றம் மாதிரியான வயக்கமான சமாச்சாரங்களை தாண்டி உங்களுக்கு நிதி அமைச்சர் கையில் வைத்திருக்கும் பொட்டி நியாபம் வருதோ.?.இந்தப் பெட்டியை பற்றி சுவாரஸ்யமான கதைகள் எக்கச்சக்கமுண்டு. இன்னி வரைக்கும் ஃபைனான்ஸ் மினிஸ்டர் தன்னோட நீண்ட சொற்பொழிவைத் தொடங்க இந்தப் பெட்டியுடன்தான் பார்லிமெண்டுக்கு வருவார். வழியிலே நம்ம பத்திரிக்கை யாளர்களுக்கு இந்த பொட்டியோட போட்டோ-வுக்கு போஸ் கொடுத்துட்டுதான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்.
ஒரு விஷயம் தெரியுமா?18ம் நூற்றாண்டு இந்தப் பெட்டியுடைய வரலாறு, அப்போதிலிருந்து தொடங்குது. ஆமாமுங்கோ.. இதன் தொடக்கம் யுகே வில் இருந்துதான் ஆரம்பிச்சுது. அந்த ஆங்கிலேயரின் பாரம்பரியம் இப்ப வரைக்கும் நம் இந்தியாவை விட்டு போகலை.
அதாவது முதல் பட்ஜெட் பெட்டி -1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அதிபர், வில்லியம் எவார்ட் கிளேட்ஸ்டோன் அப்படீங்கறவரால் வடிவமைக்கப்பட்டது, ஒரு மர பெட்டியில் கருப்பு சாடின் துணியால் கட்டப்பட்டு , சிவப்பு நிற லெதர் கொண்டு மூடப்பட்டு இருந்தது. அதற்கு முன்னர், பொதுவாக அதிபர்கள், தங்களுடைய நிதி கொள்கைகளை ஒரு லெதர் பையில் கொண்டு வந்து மக்கள் முன்னிலையில் அறிவிப்பாய்ங்க.
இந்த கிளாட்ஸ்டோன் தான் நிதி கொள்கைகளை வைக்க இந்த மாதிரி ஒரு பெட்டியை அறிமுகப்படுத்தியவர். பொதுவாகச் சபையில் அவருடைய உரையாடல் மிக நீளமாக இருக்கும். அந்த நேரம் அவரது ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க இந்தப் பெட்டி அவசியமானதாக இருந்தது. கிளாட்ஸ்டோன் பயன்படுத்திய பெட்டியின் பெயர் கிளாட்ஸ்டோன் பாக்ஸ் என்றே அழைக்கப்பட்டது. இதன் பின் இந்த நாகரீகம் உலகம் முழுவதும் பரவியது. இது தான் அந்தப் பெட்டி.
இந்த பட்ஜெட் என்ற ஆங்கில வார்த்தை பௌஜெட் “Bougette” என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் “சிறிய பை” என்பதாகும். யுகே வில் இதனைப் பட்ஜெட் பாக்ஸ் என்று அழைப்பர். இந்தியாவில் இதனைப் பிரீப் கேஸ் அல்லது பெட்டி என்று கூறுவார். பிரீப் கேஸ் என்ற பெட்டி யுகே வில் பாரம்பரியமாக ஒரு சிவப்பு பெட்டியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பெட்டியை ஒரு அதிபர் அடுத்த அதிபரிடம் ஒப்படைப்பார். அதுவரை பயன்படுத்தப்பட்ட பெட்டி மிகவும் பழையதாக ஆனதால், 2011ம் ஆண்டு ஜார்ஜ் ஆஸ்போர்ன் அவர்கள் ஒரு புதிய பெட்டியை அறிமுகப் படுத்தினார்.
இந்தியா இந்திய நிதி அமைச்சர்கள், சிவப்பு, கருப்பு, பழுப்பு போன்ற பல நிறங்களில் பட்ஜெட் பெட்டியை வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்தியாவில், ஒரு நிதி அமைச்சர் அடுத்த நிதி அமைச்சருக்கு இந்தப் பெட்டியை வழங்குவது போன்ற ஒரு பாரம்பரியம் இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட நிறமும் இதற்காகச் சிபாரிசு செய்யப் படவில்லை. இந்திய நிதி அமைச்சர்கள் பயன்படுத்திய பெட்டிகள் முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சிங் பயன்படுத்திய பெட்டியில் பக்கிள் மற்றும் வார்கள் உண்டு. , முன்னால் நிதி அமைச்சர் மன்மோகன் சிங்க் பயன்படுத்திய பெட்டி,கிளாட்ஸ்டோன் பெட்டியை போல் தோற்றமளிக்கும். இது கருப்பு நிறத்தை உடையது. ப.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர் திரு.சிதம்பரம் பயன்படுத்திய பெட்டி, லெதர் பெட்டியாகும். இது ஆங்கிலேயர்கள் வைத்திருப்பதைப் போன்று இருக்கும். தற்போதைய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள், பழுப்பு நிறத்தில் ஆன பெட்டியை வைத்திருப்பார். இந்தப் பெட்டியை இவர் 2015ம் ஆண்டு முதல் வைத்திருந்தார்.
இப்பத்திய செண்ட்ரல் மினிஸ்டர் ரொம்ப ஹைடெக்.. மினி லாப் டாப் எடுத்துட்டு போறேன் என்றவரிடம் அதிகரிகள் மேறபடி வரலாறை சொல்லி பொட்டி தூக்க சொல்லிட்டாய்ங்க!