ஓர் அரபு ஆணின் இடுப்பைத் தொட்ட பிரிட்டன்வாசிக்கு 3 மாதம் ஜெயில்! – துபாய் ஷாக்

ஓர் அரபு ஆணின் இடுப்பைத் தொட்ட பிரிட்டன்வாசிக்கு 3 மாதம் ஜெயில்! – துபாய் ஷாக்
துபாயில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான பெடரல் தண்டனை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் மற்றவரின் முகத்துக்கு எதிராக நடுவிரலை காட்டினாலோ, பொது இடங்களில் முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டாலோ, உடனே அத்தகைய நபர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இதே காரியங்களை துபாய் நாட்டினர் செய்தால், அவர்களுக்கு சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக விதிக்கப்படும். எனவே, வெளிநாட்டினர் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டமும், எச்சரிக்கையும் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது தெரியும். அச்சட்டத்தின் படி துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் அரபு ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
 
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம் ஜேமி ஹார்ரன் கைது செய்யப்பட்டார்.ஆப்கானிஸ்தானில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றிய 27 வயதான ஜேமி, இரண்டு நாள் பயணமாக துபாய் வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்தது.
கூட்டம் நிறைந்த அந்த மதுபான விடுதியில் தனது பானம் கொட்டுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்போது, தவறுதலாக மற்றொரு ஆணின் இடுப்பை தொட்டதாக அவர் கூறினார். இதை அடுத்து புகார் அளித்த தொழிலதிபர், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆனால் அரசுத் தரப்பில் வழக்கை தொடர்ந்து நடத்தினர்.
இந்நிலையில் அந்த ஜேமிக்கு ஆதரவளித்து வரும் ‘டிடெய்ண்டு இன் துபாய்’ எனும் பிரச்சார குழு, ஜேமிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தியை வெளியிட்டுள்ளது. ” துபாயில் உள்ள ராக் பாட்டம் பாரில், ஒரு அரபு வாடிக்கையாளரின் இடுப்பை தற்செயலாக தொட்டதற்காக, ஜேமிக்கு இன்று 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.” என அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் அளிக்க, முக்கிய சாட்சியங்கள் அழைக்கப்படவில்லை,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஜேமியின் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்வார்கள் என்றும் இக்குழு கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!