தாஜ்மஹால் சிவனின் ஆலயமான தேஜ் கோயில்தான்! – பாஜக எம்.பி. சர்ச்சை தகவல்!

தாஜ்மஹால் சிவனின் ஆலயமான தேஜ் கோயில்தான்! – பாஜக எம்.பி. சர்ச்சை தகவல்!

எட்டு நூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் இந்தியாவுக்கு பல்வேறு பெருமைகள் சேர்த்தனர்.அதில் குறிப்பிடத்தக்கது கட்டட கலை.மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் இந்திய கட்டட கலையின் உச்சம்.தாஜ்மஹால் தொடர்ச்சியாக உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலக அதிசயங்களை மாற்றி வரையறுத்த போது கூட புதிய பட்டியலிலும் தாஜ்மஹால் சேர்ந்து கொண்டது. தாஜ்மஹால் உலக மக்கள் வியந்து பார்க்கும் அதிசயமாக இருப்பது ஒரு காரணம்.உலக நாடுகளின் அதிபர்கள் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு அரசியல் சுற்றுப்பயணம் வரும் போது தாஜ்மஹால் பார்க்காமல் போவதில்லை. இவ்வளவு பெருமை கொண்ட தாஜ்மஹால் முஸ்லிம் கட்டட கலையின் அடையாளமாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.முஸ்லிம் இந்தியாவில் ஆட்சி செய்ததற்கான வரலாற்று சுவடுகளே இருக்கக் கூடாது என்று இப்போது உள்ள ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.அதற்குரிய அடையாளங்கள் ஒவ்வொன்றையும் இல்லாமல் செய்தும் வருகின்றனர்.

முஸ்லிம் மன்னர்கள் கட்டிய கட்டடங்கள் புராதன மஸ்ஜிதுகள் அனைத்தையும் இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இவைகளை எல்லாம் பராமரித்து பாதுகாக்கும் நோக்கத்தில் கட்டுப்படுத்தி வைக்க வில்லை.இவற்றை பராமரிப்பதும் இல்லை. இதனிடையே தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும் என பாஜக எம்பி வினய் கட்டியார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில அரசு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாஜ் மஹோத்தவ் விழாவை அம்மாநில அரசு வரும் 18ம் தேதி முதல் நடத்துகிறது. இதுகுறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி வினய் கட்டியார், ‘‘தாஜ்மகால் என்பது மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திற்கு முந்தையது. அப்போது தேஜ் கோயிலாக இருந்தது. அந்த கோயிலை ஒளரங்கசீப் மயானமாக மாற்றி விட்டார். இருப்பினும் மக்கள் மனதில் அது சிவனின் ஆலயமான தேஜ் கோயிலாகவே உள்ளது. எனவே இதற்கு விழா எடுப்பது தவறல்ல. எங்களை பொறுத்தவரை தாஜ்மகாலும், தேஜ் கோயிலும் ஒன்று தான். அது விரைவில் கோயிலாக மாறும்’’ எனக் கூறினார். பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும், தாஜ்மகால் இந்து கோயில் என பலமுறை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் ரிப்போர்ட்:

அதே சமயம் கடந்த ஆண்டு கடைசியில் அய்யங்கார் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்துக்கு ஒரு கேள்வியை விண்ணப்பித்துள்ளார்.அதில்,தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹான் கட்டிய கல்லறை தானா? இல்லை, ரஜபுத்திர மன்னர் முகலாய சாம்ராஜ்யத்துக்கு பரிசாக அளித்த சிவன் கோவிலா? இது தான் கேள்வி. பிரபல வரலாற்று ஆசிரியர் எனப்படும் பி.என்.ஓக் மற்றும் வழக்கறிஞர் யோக்கேஷ் சக்ஸ்னா ஆகியோரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறி இருந்தார்.மேலும் தாஜ்மஹால் குறித்த உண்மைகளை அறிய தாஜ்மஹாலில் உள்ள அனைத்து அறைகளின் வடிவமைப்பையும் ஆராய வேண்டும் என்றும் அதற்காக மூடப்பட்டுள்ள அறை கதவுகள் அனைத்தையும் திறக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம்,ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில்,ஹரிசங்கர் ஜெயின் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் ஒரு மனு தாக்கல் செய்தனர்.அதில்,”12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்த்தி தேவ் என்பவரால் தஜோ மகாலயா(சிவன்)கோவில் கட்டப்பட்டது. பின்னர்,ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் வசமானது. அவருக்குப் பிறகு 17 ஆம் நூற்றாண்டில்,ராஜா ஜெய்சிங் நிர்வகித்து வந்தார்.அதன் பிறகு 1632 ல் ஆட்சி புரிந்த ஷாஜஹான் இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பின்னர் ஷாஜஹான் மனைவி மும்தாஜ் இறந்த பிறகு அந்த கோவிலை மனைவியின் நினைவிடமாக மாற்றினார். இந்த கோவில் தான் தாஜ்மஹால் என அழைக்கப்படுகிறது.எனவே கோவிலுக்குள் வழிபாடு செய்ய இந்துக்களை அனுமதிக்க வேண்டும்”என கோரி இருந்தனர்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு,மத்திய அரசு, கலாச்சார அமைச்சகம்,உள்துறை செயலாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வு மையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ்க்கு பதில் அனுப்பிய தொல்லியல் துறை, “வரலாற்று ரீதியாகவும், ஆவணங்களின் படியும் யமுனை ஆற்றின் கரையில் உள்ள ஆக்ராவில் பழங்கால நினைவுச் சின்னமான ஆக்ரா மட்டுமே அமைந்துள்ளது.இது சர்வதேச அளவில் 7 வது உலக அதிசயமாகவும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.1920 டிசம்பர் 22 அன்று, பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில், தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம் என்று கூறப்பட்டு உள்ளது.தாஜ்மஹால் அருகில் சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.எனவே மனுதாரர் புகார் அடிப்படை ஆதாரமற்றது.கற்பனையானது.அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொல்லியல்துறை பதில் கூறி இருக்கிறது.மேலும்,இந்த மனுவை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தொல்லியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.தாஜ்மஹால் பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய கலாச்சார அமைச்சகம் 2015 ஆம் ஆண்டு மே மாதமே நாடாளுமன்ற மக்களவையில்தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!