Exclusive

இந்தியாவில் பப்ஜி விளையாட்டின் புது வடிவ முன்பதிவு தொடங்கிடுச்சு!.

ந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது முதல் இந்த கேம் மீண்டும் வெளியாகாதா என இவ்விளையாடின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் நம் நாட்டில் Battlegrounds Mobile India முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக, உங்கள் Android போனில் நீங்கள் Google Play Store க்குச் சென்று PUBG Mobile இன் இந்திய பதிப்பைத் தேடி முன்பதிவில் கிளிக் செய்யவும். வாக்குறுதியளித்தபடி, கிராப்டன் உங்கள் கணக்கிற்கான முன் பதிவுசெய்தால் உடனடி வெகுமதிகளைப் பெறுவார், இது போர்க்களங்கள் மொபைல் இந்தியா கிடைத்தவுடன் நீங்கள் பயன்படுத்தலாம்.

பப்ஜி – ஒரு சாதாரண விளையாட்டு அல்ல… அது ஒரு எமோஷன். விடியலையும், இரவையும் மறக்கச் செய்யும் மாயாஜால உலகம். ஏகப்பட்ட பேர்களுக்கு இந்த கேம் ஏதேதோ டிப்ரஷனில் இருந்து வெளிவர ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து உதவியது என்ரு சொன்னல் மிகையல்ல. ஒரே ஒரு சிம்பிள் காரணம்தான். நம் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இந்த கேமை விளையாடலாம். அதுவும் லாக்டௌன் சமயத்தில் இரவு, பகல் பார்க்காமல் பல மணி நேரம் விளையாட ஆரம்பித்தவர்கள், இதன் அடிக்ட்டுகளாக மாறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக மாறிவிட்டது இந்த பப்ஜி. பலரும் இந்த கேமிற்க்கு அடிமையாகி வெளி உலகத்தை மறக்கும் நிலை ஏற்படத் தொடங்கியது. இதனால் பெற்றோர்கள் கதறினார்கள். இன்னும் சில டீனேஜர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை இதில் இழந்தார்கள். அதை கூட பெரிசாக கண்டுக்கொள்ளாத மோடி அரசு சீனா இவ்விளையாட்டு ஆஃப்ஃபில் முதலீடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி தடை செய்தது.

அதனால் தற்போது Players Unknown Battleground’ (PUBG) என்ற பெயரில்லாமல், ‘Battlegrounds Mobile India’ என்ற பெயரில் புதிய கேமை இந்தியாவில் வெளியிட இருக்கிறது கிராஃப்டன் (Krafton) நிறுவனம். சீன நிறுவனமான டென்சென்ட் உடன் இணைந்து விநியோகம் செய்ததாலேயே இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது. தற்போது டென்சென்ட்டை கழட்டிவிட்டு தனியாக இந்தியாவில் இந்தப் புதிய விளையாட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது கிராஃப்டன் நிறுவனம்.

இந்த தடைக்கு முன்பு உலகில் அதிகளவு பப்ஜி பயனர்களைக் கொண்ட நாடாக இருந்தது இந்தியா. பப்ஜி தடைசெய்யப்பட்டதுமே இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க பல பேட்டில் ராயல் கேம்கள் போட்டிப்போட்டன. அதே போன்று இந்திய நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட விளையாட்டான ஃபாஜி (FAU-G) வெளியிடப்பட்டது. பப்ஜி அளவிற்கு இல்லை என ஃபாஜிக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வந்தன.

இந்நிலையில் இப்போது இந்தியாவை மட்டுமே குறிவைத்து இந்த புதிய கேம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியப் பயனர்களைக் கவரும் வண்ணம் இந்த புதிய கேம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேமிற்காக சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் யாவும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு இங்கேயே சேமிக்கப்படும், வெளிநாடுகளுக்குச் செல்லாது எனவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

இதனிடையே PUBG IP இன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான கிராப்டன் அதன் வெளியீட்டு தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற பல தகவல்கள் விரைவில் போர்க்களம் மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். சில ரசிகர்கள் ஜூன் 10 ஆம் தேதி போர்க்கள மைதானத்தை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

admin

Recent Posts

உலகின் மிக வயதான ஆமைக்கு குவியும் வாழ்த்துகள்..:-191-வது பிறந்தநாளை எட்டியது!

சர்வதேச அளவில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்? ஆமை? யானை? திமிங்கிலம்? இவை மூன்றும் பொதுவாக அதிக…

3 hours ago

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்!

2007 வரை, இது "ஊனமுற்ற நபர்களின் சர்வதேச தினம்" என்று அழைக்கப்பட்ட நாளிது. உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன்…

14 hours ago

‘ஃபைட் கிளப்’ திரைப்பட டீம் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் !!

டைரக்டர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட்…

24 hours ago

பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்க தொடங்குவோமா?

மத்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று வந்தது. அந்த விசாரணையில், கணவர்…

1 day ago

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பல தரப்பினரும் வாழ்த்து!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் கிராண்ட்…

1 day ago

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு!

பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில்…

1 day ago

This website uses cookies.