வங்கிகள் ஸ்ட்ரைக்!

வங்கிகள் ஸ்ட்ரைக்!

இந்தியா முழுக்க 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையையையும், அதன் சாதக, பாதங் களையும்  எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நாளில், மத்திய அரசை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய வங்கிகள் அமைப்புடன், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அமைப்பு சம்பள உயர்வு குறித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த இரண்டு நாட்களிலும் வங்கி சேவை கள் நாடு முழுவதும் முடங்கும் அபாயம் உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை என்பதால், ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வங்கிகள் இயங்காது என்பது பொதுமக்களையும் பெரும் சிரமத்திற்குள்ளாக்கும்.

Related Posts