பேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது!

நாடெங்கும் பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Research Associate -Technical – 01

பணி: Deputy Manager (Accounts) – 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியலில் முதுகலை, எம்சிஏ முடித்தவர்கள், பட்டய கணக்காளர் (சிஏ) முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 21 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9,36,020 வரையில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in அல்லது  ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.11.2019

Related Posts

error: Content is protected !!