June 2, 2023

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை!- மத்திய அரசு அதிரடி

ன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ ‍வேண்டாமென மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடை செய்ய வேண்டும் என கோரிக்‍கை எழுந்தது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ வேண்டாமென, அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்‍கொண்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறை தாக்‍கத்தை ஏற்படுத்துவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.