பிரமாண்டமான ஆப்டிக்கல் ஷோ ரூம் பக்கம் போகாதீங்க!
முன்னரெல்லாம ஒருபொருளை விலை அதிகமா கொடுத்து வாங்கிட்டோம்னா என்னப்பா ஸ்பென்சர் ரேட்டா இருக்கேன்னு சொல்வாங்க. இப்போ அந்த ட்ரென்ட் மாறி ஒருபொருள் விலை அதிகமாயிருந்தா என்னப்பா ஆப்டிகல் ரேட்டா இருக்குன்னு சொல்ற நிலை வந்தாச்சு. மூக்கு கண்ணாடிகளோட விலை அப்படி போய்க்கிட்டு இருக்கு..
சென்னையில் தெருவிற்கு நாலு ஆப்டிகல் கடைன்னு மிகப்பெரிய அளவுல திறக்கறாங்க. குளுகுளு ஏசி, டெஸ்ட் பண்றதுக்கு ஆட்கள், சேல்ஸ் கேர்ல்ஸ் இப்படி ஒரு கார்ப்பரேட் லெவல்ல சில கடைகள் மிகப்பெரிய கட்டிடங்கள்ல திறக்கப்படுது. பல இலட்சங்கள் கோடிகள் கூட இந்த ஷோரூம்களுக்கு செலவு பண்றாங்க..காரணம் இப்படி முதலீடு பண்ணா மாசம் பல இலட்சங்கள் சம்பாதிக்க முடியும்கிற துறையா இது இப்போ மாறிகிட்டு வருதுங்கிறதாலதான்.
நிறயை கடைகள், ஷோரூம்கள் இப்படி வேகமா வளர்றதுக்கு காரணம் பார்வை குறைபாடுகள் நம்ம நாட்ல கோடிக்கணக் கான பேருக்கு ஏற்பட்டுகிட்டு வருது. பள்ளிக்கு போகாத வயசுகள்ல இருக்கிற குழந்தைகள்ல ஆரம்பிச்சு இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னாடி பல மணிநேரம் வேலை செய்யற இளையவர்கள் வரை கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுப்போச்சு.. இதுக்கு பலகாரணங்கள் இருக்கு. அதுபற்றி தனியா விவாதிக்கலாம்.
பிரம்மாண்டமா இருக்கிற கடைகள்ல டெஸ்ட்டிங் ப்ரீங்கறத பாத்துட்டு உள்ளே நுழைஞ்சா போச்சு.. மினிமம் பிளாஸ்டிக் ப்ரேமோட விலையே 650 ரூபாய். இந்த ப்ரேமோட 2 பக்கம் பட்டையானது இன்ஜக்ஷன் மோல்டிங்கி்ல் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்குல தயாரிக்கிறாங்க. இரண்டு கண்ணாடி பொருத்தற அந்த வளையம் மற்றும் அதனோட சேர்ந்த பகுதி ஒரு மோல்டிங். மூக்கில் உட்காருவதற்கு 2 பிளாஸ்டிக் பேடு. இதனை இணைக்க 2 ஸ்க்ரூ. அவ்வளவுதான். இதனோட மொத்த தயாரிப்பு செலவே அதிகபட்சம் 7 லேந்து 9 ரூபாய்க்குள்ல அடங்கிடும். ஆனா இதனோட விலை இப்படி பிரம்மாண்டமா இருக்கிற ஆப்டிகல் கடைகள்ல 650 ரூபாய். இதையே ஒரு சாதாரண கடையில் வாங்கினா 250 ரூபாய்க்கு வாங்கிடலாம். அதுவே அதிகம் தான் இருந்தாலும் வேற வழியில்லை..
இதுல அந்த பிளாஸ்டிக்ல சில க்வாலிட்டிக்கு ஏத்த மாதிரி ரேட் ஏறிகிட்டே போகுது. அதே மாதிரிதான் மெட்டல் ப்ரேம்களும். இதில் பிராண்டட்ன்னு சொல்ற பல நிறுவனங்களோட ஒரிஜினல் ப்ரேம்களுக்கு பதிலா காப்பி ப்ரேம்கள் தான் நிறைய கடைகள்ல விக்கிறாங்க.. தைவான் மற்றும் சீன தயாரிப்புகள் ஏகத்துக்கும் இங்கே வந்தாச்சு.. அந்த ப்ரேம்கள் எல்லாம் கொள்ளை லாபத்துக்கு விக்கிறாங்க..
சரி இதுதான் இப்படின்னு பார்த்தா அவங்கவங்க பார்வை குறைபாடுக்கேத்த மாதிரி லென்ஸ் போடறதுக்கு குறைஞ்ச பட்சம் 400 ரூபாய்லே ஆரம்பிச்சு 18 ஆயிரம் வரை போகுது. பிரான்டட் லென்ஸ்களோட விலையோ எக்கச்சக்கம். அதுல இந்த கடைக்காரர்களுக்கு மினிமம் 40 லேந்து 60 பர்சென்ட் வரை லாபம். பைஃபோகல், ட்ரை போக்கல், ஃபோட்டோ க்ரோமிக், ஆன்ட்டிகிளார், டபுள் ஆன்ட்டி கிளார், டிஜிட்டல், பாலிகார்பனைட், ஆன்ட்டி ரிப்ளக்டிவ், க்ராட்ச் ரெசிஸ்டன்ட்,
யு.வி.ப்ரொடக்ஷன், ப்ளூ லைட் ப்ரொடக்ஷன் இப்படி ஏகத்துக்கும் வெரைட்டி இருக்கு. லோக்கல் பிரான்ட்டடா இருந்தா 100 சதவீதம் லாபம். ஒரு நாளைக்கு நாலைஞ்சு கஸ்டமர் வந்தாலே போதும். ஆயிரக்கணக்குல லாபத்தை பாத்துடலாம். சரி இவ்வளவு காஸ்ட்லியா வாங்கிப்போட்டாலும் இது எத்தனை வருஷத்துக்கு பயன்படுத்த முடியும்னு பாத்தா அதிக பட்சம் ஒரு வருஷத்லேந்து இரண்டு வருஷம் வரைதான். காரணம் அதற்குள்ளாவே பார்வைக்குறை பாடுகள்ல மாற்றம் ஏற்பட்டு வேற லென்ஸ் மாத்த வேண்டியதா இருக்கு.. அவ்வளவு காஸ்ட்லியா வாங்கி யூஸ் பண்ற லென்சுக்கும் பிரேமுக்கும் பைபேக் எல்லாம் கிடையாது..
மொபைல்களை அதிகமா விலை கொடுத்து வாங்கறதும் பார்வை குறைபாடு இருக்கிறவங்க ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து கண்ணாடி வாங்கி போட்டுக்கறதும் யாருக்கு லாபம்னா அந்தந்த தயாரிப்பு நிறுவனங் களுக்கும் அதை விற்பனை செய்யற கடைகளுக்கும்தான். அதனால பெரிய பெரிய ஷோரூம்களுக்கு போய் மூக்கு கண்ணாடிகளை வாங்காம சாதாரண கடைகளுக்குப் போய் வாங்கினா பர்ஸ்ல இருக்கிற பணத்தை கொஞ்சமாச்சும் மிச்சப்படுத்த முடியும்.. பிரம்மாண்டமான இருக்கிற ஆப்டிகல் ஷோரூம்களை நம்பி போறவங்களை சில நிறுவனங்கள் ப்ரெய்ன் வாஷ் பண்ணி அதிக விலையில் வாங்க வச்சுடறாங்க.
சோ பீ கேர்ஃபுல்.