June 2, 2023

காஞ்சியை மக்கள் கடலாக்கிய அத்திவரதர் தரிசனம் நிறைவு! – வீடியோ

கச்சி, கச்சிப்பேடு, பிரளய முத்து, சிவபுரம், திரிமூர்த்திவாசம், பிரம்மபுரம், காமபீடம், சகற்சாரம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீரபுரம், தண்டகபுரம் மற்றும் காஞ்சிபுரம் என்னு பேருடைய நகரின் அத்திவரதர் தரிசன கோலாகலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நாளை அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திவரதர் சயனிக்க உள்ளார். இனி 2059-ம் ஆண்டில்தான் மீண்டும் தரிசனம் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் நடைபெறு கிறது. ஜூலை 31 வரை சயனக் கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர், ஆக. 1 முதல் நின்ற கோலத் தில் காட்சி அளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் நடை பெறும் இந்த வைபவத்தில் 47-ம் நாளான நேற்று வரை ஒரு கோடிக் கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, நேற்று இளஞ் சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இன்று நிறைவு நாள் என்பதால் நேற்று அதிகமான கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை சீராகவே இருந் தது. நேற்று பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் காஞ்சி புரத்தில் குவிந்தனர்.

அத்திவரதரை குளத்துக்குள் வைக்கும் நிகழ்வு குறித்து விசாரித்த போது, “பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு இன்று சுவாமிக்கு காலையும் மாலையும் பூஜைகள் செய்து பின்னர் தைலக் காப்பு சாற்றப்படும். இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்தா லோசித்து குறிக்கப்படும் நேரத்தில் சுவாமி பள்ளி அறையில் சயனிப்பார். அது சுவாமியின் பள்ளி அறை என்பதால் அவரை வைக்கும்போது படம் எடுக்கக் கூடாது.

கருங்கல் கட்டிலில் சயனிக்க உள்ள அத்திவரதரின் தலைப் பகுதி மேற்கு பாகத்திலும், திருவடி கிழக்கு பாகத்திலும் உள்ளவாறு வைக்கப்படுவார். தலைப் பகுதியில் ஆதிசேஷன் பொருத்தப் பட்டுள்ளது. சுவாமியை அந்தக் கட்டிலில் எழுந்தருளச் செய்து 16 நாக பாஷங்கள் அவரை சுற்றி வைக்கப்படும். பின்னர் பள்ளியறை பூஜை செய்யப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்படும். இக்குளத்தில் 2 கிணறுகள் உள்ளன. அதில் எப்போதும் வற்றாத தீர்த்தம் சுரந்து கொண்டுள்ளது. முதலில் இந்த தீர்த்தம் நிரப்பப்பட்டு பின்னர் சுவாமிக்கு உண்டான பள்ளியறைப் பாசுரங்கள் பாடப்பட்டு இந்த விழா நிறைவு பெறும். 1937-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் சுவாமி பள்ளியறை யில் சயனித்த பின்பு ஒரு மாதம் அதிக மழை பெய்துள்ளது. அதற்கு முன்பும் பெய்துள்ளதாக பெரியவர்கள் சொல்லக் கேட் டுள்ளோம். அதேபோல் இந்த ஆண்டும் மழை பெய்து தானாகவே இத்திருக்குளம் நிரம்பும் என்பது பெரியவர்கள் வாக்கு” என்றார்கள்.

அடிசினல் ரிப்போர்ட்

முன்னதாக அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி ஐகோர்ட்டில்ல் 2 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ‘கோயில் மரபு மற்றும் வழி பாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகமும், அரசும்தான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறி நேற்று அந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அதே சமயம் அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட் டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப் படும் அறையை சுத்தமான தண்ணீ ரால் நிரப்ப வேண்டும். அது போல அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீ ரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப் பாட்டு வாரியம் வரும் ஆக. 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தர விட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.