லடாக்கின் பகுதியில் அத்து மீறிய சீன வீரர்கள்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம்!! .

லடாக்கின் பகுதியில் அத்து மீறிய சீன வீரர்கள்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம்!!  .

உலகமெங்கும் கொரோனா பீதியில் மக்கள் முடங்கி கிடக்கும் நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று திங்கள்கிழமை இரவு சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உட்பட மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். மூவரில் ஒரு ராணுவ வீரர் பழனி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினருக்கு எதிராக பல அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எல்லைகளில் சீன ராணுவ படைகள் மற்றும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டன அதற்கு பதிலடியாக இந்திய எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த பதற்றத்தை தணிக்க இருநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் படைகளை பின்வாங்க சம்மதித்தனர்.

இந்நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கை bயின் போது திங்கள்கிழமை இரவு, சீன ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சீன ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இதில், ஒருவர் அதிகாரி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகவும், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த 3 வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி. 40 வயதான பழனி 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளனர்.

இதனிடையே நிலைமை விபரீதமாவதை தடுக்க இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் எல்லையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எல்லை நடந்த தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகள், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசரக் கூட்டம் நடத்தினார்.

கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீன போருக்கு பிறகு, சீனாவால் தற்போது மிகப்பெரிய அளவில், இந்தியா தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!