கருத்து கணிப்புகள் எல்லாம் உண்மையா? ஏன் வித்தியாசம் வருகிறது!

கருத்து கணிப்புகள் எல்லாம் உண்மையா? ஏன் வித்தியாசம் வருகிறது!

திமுக, அதிமுக நண்பர்கள் சொல்லும் விஷயம், இதுபோன்ற கருத்து கணிப்புகள் செய்ய அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆட்களையே கொடுப்பார்கள். அவர்கள் ஏற்கனவே கட்சி சார்புடைய நிலையில் அவர்கள் எப்படி நேர்மையான ஒருவரை கருத்து கணிப்பு செய்ய அனிமதிப்பார்கள்? ஒரு கருத்து கணிப்பு என்றால் எந்த ஊரில் எங்கே எப்போது கருத்து கணிப்பு எடுத்தோம். 1, 2, 3 என்று சீரியல் நம்பர்கள் கொண்ட கணிப்பு சீட்டுகள் இருக்க வேண்டும். அதில் தவறாகிவிட்டால், அதையும் திரும்ப கொடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா சீட்டுகளும் சரியாக எடுக்கப்பட்டதா அல்லது ஏதாவது சீட்டுகள் மறைக்கப்பட்டதா என்று தெரியும்.

மேலும் இந்த கருத்து கணிப்புகளை செய்வது ஒரு மீடியா நிறுவனம். உதாரணமாக NDA அல்லது Times Now கருத்து கணிப்பு செய்கிறது என்றால், மீடியாவில் இருக்கும் 80% பேர் பாஜகவிற்கு எதிரானவர்களே செய்வார்கள். அவர்கள் மேற்பட்ட கட்சி சார்புடையவர்களாக இருப்பார்கள் அல்லது அதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்களாக இருப்பார்கள். அது என்ன ஆதாயாம்? கேஜரிவாலின் டெல்லி அரசு 2022 ஆண்டுக்கு விளம்பரத்திற்காக செலவு செய்த தொகை 480 கோடிகள். ஆனால் இந்திய அரசு இந்தியாவிற்கே செய்த விளம்பர செலவு வெறும் 220 கோடிகள். அப்போது அந்த பத்திரிக்கைகள், யாருக்கு ஆதரவாக செயல்படும்?

ஒரு கருத்து கணிப்பை செய்பவர் வாக்காளர் சொல்வதை அப்படியே பதிகிறாரா, அல்லது தவறாக செய்கிறாரா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. மேலே அந்த ரிசல்ட் வந்தபின் வெளியிடுமுன் மேற்பட்ட கட்சிக்காரர்களிடம் பகிர்ந்து, அவர்கள் கொடுக்கிற கவனிப்புக்கு ஏற்ப அதை மாற்றம் செய்வார்கள். இருந்தாலும் அதை பெரும்பாலும் தேர்தல் காலத்திற்கு முன்பு செய்யும் தில்லுமுல்லுகள் அதிகமாகவும், பின்பு தேர்தல் நெருங்க, நெருங்க அது ஒரளவிற்கு கொஞ்சம் உண்மையை சொல்வதாகவும் மாறும். ஏனெனில் அது சொல்லும் கடைசி ரிசல்ட் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுவார்கள் என்பதால். முழுவதும் பொய்யானால், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடுமே/அப்புறம் அதுவும் முரசொலிதானே!?

பாஜகவிற்கு தமிழகத்தில் வெறும் 2% வாக்குகள் மட்டுமே இருப்பதாக நேற்றுவரை சொன்னவர்கள், இப்போது 15-22% இருப்பதாக ஏன் சொல்ல வேண்டும்? அதாவது பெரிய மாற்றங்கள் நிகழ்கிறது. அதற்கேற்ப மறைக்கும் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக குறையும், கடைசியில் ஒரு 80% உண்மைகளாவது வெளிப்படும்! கருத்து கணிப்பு என்பதே புரிதல் என்றாலும், அது ஒரளவிற்கு உண்மை சொல்லும் நிலையில் சிலரிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் செய்யும் யூகமே. முதலில் வாக்காளர் தனது உண்மையானை நிலையை சொல்கிறாரா என்று நினைப்பதே தவறு!

ஒரு மீடியா ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவு என்றால், அவர்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் கருத்துக்களை மாற்றை சொல்வது உண்டு. உதாரணமாக, திமுக ஆட்சியில் எதிராக கருத்து கணிப்பு சொன்னால் நமக்கு ஏதாவது பிரச்சினை வருமா என்று பயப்படுவது உண்டு. முதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக்கொண்டு, அதன் பின், அந்த கூட்டணி மாற்றத்திற்கு ஏற்ப கணக்குகளை கூட்டி கழித்தால் வந்துவிடும். அது அரித்மெடிக்காக எளிதாக செய்தாலும், அந்த கூட்டணி பொருந்தும் கூட்டணி, பொருந்தா கூட்டணி என்ற கெமிஸ்ட்ரியை பெருமளவில் கடந்த கால முடிவுகளை வைத்து யூகம்தான் செய்கிறோம். அந்த யூகம் சரியாக அமைய வேண்டுமெனில் முதலில் ஒரு கட்சிக்கு சார்பாக இல்லாமல், அதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்! அது ஓரளவிற்கு நல்ல மாற்றங்களை கொடுக்கும்..

கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு எடுத்த கணிப்புகள் முதல் சென்ற வாரம் எடுத்த கணிப்புகள் வரை நம்மிடம் இருக்கும். அப்படியே வைத்து பார்க்கும்போது பாஜகவிற்கு 17.3% ஆக இருக்கிறது. இப்போது ஏற்படும் மாற்றங்களை வைத்து அதை டெல்டாவாக, முன்பு எடுத்த தொகுதிகள் மீது அப்ளை செய்து நாம் தருவிக்கின்ற பாஜக 20% த்தை தாண்டிவிட்டது என்று சொல்லும் விஷயம் என்பது கூட ஒரு வகை அரித்மெடிக்தான். ஆனால் விஜயகாந்த் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கிறது என்பதை பொறுத்து அந்த ஓட்டு % அட்ஜஸ்மெண்ட் என்ற யூகம் ஒருவகை கெமிஸ்ட்ரி. அதாவது 2014 தேர்தலில், தேமுதிக ஓட்டுக்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது கூட்டணிக்கு கிட்டத்தட்ட முழுவதுமாக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்தது. ஆனால் பாமக கட்சியின் ஓட்டுக்கள் முழுவதுமாக ட்ரான்ஸ்பர் ஆகவில்லை என்பதை பொறுத்து, அந்த கூட்டணி வேலை செய்யும் என்று யூகிப்பது கெமிஸ்ட்ரி.

ஆனால் மீடியாக்கள் எடுக்கும் ஒபீனியன் போல என்பதில் வரும் நிறைய மாற்றங்களை ஆரம்ப காலத்தில் செய்வார்கள்.. தேர்தல் நெருங்க நெருங்க உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. அதற்காக முரசொலி, தினகரன் போன்ற டாய்லெட் பேப்பர்கள் எல்லாம் எப்போதும் மாறாது, அதற்கு என்று ஒரு அடிமைகள் கூட்டம் இருக்கிறது. அதை தவிர யாரும் படிக்க முடியாது. அங்கே எழுதுபவனும், படிப்பவனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆனால் அதையே Times Now, NDTV போன்றவை செய்ய முடியாது. தந்தி டிவி, புதிய தலைமுறை போன்ற டிவிக்களுக்கு ரெப்யூட்டேஷன் என்று எதுவும் இல்லாதபோது அவர்கள் எதற்காக அதைப்பற்றி கவலைப்படுகிறார்கள்? வாங்கிய காசுக்கு வஞ்சமில்லாமல் கூவும் அடிமைகள்தானே?

அதே சமயம் SSN, சாணக்யா போன்றவற்றில் கருத்து கணிப்புகளில், மேற்சொன்ன மாற்றங்கள் இருந்தாலும், அதை அப்படியே பிரதிபலிக்க மாட்டார்கள். அதை கன்சிஸ்டன்சி பார்த்த பின்புதான் அதை நம்புவார்கள். பாஜகவிற்கு இன்றைய சூழலில் 22% ஆதரவு இருப்பதாக சொன்னாலும், அந்த டேட்டாவில் சிலவற்றை குறைக்க வேண்டிய கட்டாயம். ஏனெனில் அவரை ஏற்கனவே சங்கி என்று சொல்லும் நிலையில் அவர் அதை தவிர்க்க சிறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்வார். ஆனால் அடுத்தடுத்த கணிப்புகளில் அதையே பிரதிபலித்தால், வெளிப்படையாக பகிர்வார்!

அந்த கருத்து கணிப்புகளில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பதை மறைவில்லாமல் பகிர வேண்டும். ஏனெனில் அதில் ஆயிரம் பதில்கள் புதைக்கப்படும்! உதாரணமாக, எந்த கட்சி உண்மையான எதிர்கட்சியாக செயல்படுகிறது என்று LKG பையனிடம் கேட்டாலே அண்ணமலை அங்கிள் கட்சி என்பான். ஆனால் சாணக்யாவின் கேள்விக்கு 18% நாம்தமிழர் என்றும், 28% பாஜக என்றும் சொல்பவர்கள், அதிமுகவிற்கு 54% என்கிறார்கள். அதாவது அதிமுகவிற்கு இருக்கும் ஆதரவே 21% என்றால் அது எப்படி? திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுபவர்கள், அவர்கள் கோபம் அண்ணாமலை எதிர்கட்சியாக இருப்பதால், அவர் மீது கோபம் அதிகம் இருக்கும்போது எப்படி அண்ணாமலைக்கும், சீமானுக்கு ஓட்டு போடுவார்கள்?

பதிலாக எதிரிக்கு எதிரியான அதுமுகவைத்தானே பங்காளி என்று ஆதரிப்பார்கள்! அப்போது முன்பு கேட்ட கேள்விகளில், திமுக கூட்டணி வாக்குகளை அதில் மைன்ஸ் செய்துதான் அந்த சதவீதத்தை கணக்கிட வேண்டும். ஆனால் அதை சணாக்யா சொன்னதே தவிர செய்யவில்லை. எனவே கேட்கும் கேள்விகளில் பதில்களை யூகிக்க Clear Demarcation இருக்க வேண்டும்! அது வெறும் கருத்தல்ல, உளவியல் ரீதியாக ஆராய்ந்து கணிக்க வேண்டும்! எனவே எல்லா கருத்து கணிப்புகளும் கணிப்பல்ல, அதை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு வேண்டும். அந்த அடிப்படையில் செய்கிறேன். ஆனாலும், பாஜக மீது இருக்கும் ஈடுபாடு எனது கணிப்புகளை, கொஞ்சம் திசை திருப்ப வாய்ப்புகள் உள்ளது என்றாலும், ஓரளவிற்கு என்னால் முடிந்த அளவிற்கு நேர்மையாக அதை செய்கிறேன்.

இங்கே SSN Survey, கிளியராக அந்த டேட்டாவையே ஷேர் செய்வதால், அதில் உண்மைத்தன்மை அதிகம் இருக்கும் என்று நம்புகிறேன்! அதனால் அதை வெகுவாக நம்புகிறேன். அதாவது இன்று விஜய்கந்த் கட்சிக்கு ஆதரப்பவர்கள் முன்பு எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள், ஏன் அந்த மாற்றம் என்பதுவரை, எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு மாற்றம் வருகிறது என்பது வரை அதை டேட்டாவாக சொல்லிவிடுவதால், நான் அதை உளவியல் ரீதியாகவும் சிந்தித்து, அதன் முடிவுகளை அப்படியே தந்தாலும், நாளை ஏற்படும் மாற்றங்களை யூகிக்கிறேன்! இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கொஞ்சம் நடுநிலையான சிந்தனை, கொஞ்சம் நேர்மையும் இருந்தால் போதும்! அதற்கு நம்மிடம் மன சாட்சி என்ற இன்று இருக்க வேண்டும்!

2019 தேர்தலில் மோடி மீது கடும் வெறுப்பை திமுக மீடியா மூலம் கட்டமைத்திருந்தது. இன்று அது இல்லை. முன்பு 69% பேர் மோடியை வெறுத்தார்கள், அவர் தோற்பார் என்று நம்பினார்கள், இன்று அதே 69% பேர் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கணிக்கிறார்கள். அதில் 52% மோடி ஜெய்த்தால் நல்லது என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் எந்த கூட்டணி அமைந்தாலும் அதில் மூன்றில் இரண்டு பங்கான 36% ஓட்டுக்கள் பாஜகவிற்கு கிடைக்கும். அது வலுவான கூட்டணியாக இருந்தால் அது % அதிகரிக்கும், வீக்காக இருந்தால் அது குறையும். அதே சமயம் திமுக செய்கிற மோசமான அரசாங்கத்தால் அந்த கோபம் அதற்கு எதிராக திரும்பும். சென்ற முறை செய்ததுபோல, அது சொல்லுகிற ஒவ்வொரு கருத்துக்கும் அதன் கேவலமான ஆட்சியால் ஒரு எதிர்வினை உண்டு. அப்போது யார் திமுகவை தோற்கடிப்பார்கள் என்று நம்புகிறதோ, அதற்கு ஏற்ப ஓட்டுக்கள் கூடும் அல்லது குறையும்!அப்படி இருக்க மோடி இராமநாதபுரத்தில் போட்டியிட்ட்டால், அது இந்த தேர்தலை வெகுவாக மாற்றும் என்பதால், கூட்டணியே இல்லாவிட்டால் கூட மோடி இரண்டாவது தொகுதியாக இங்கே போட்டியிட வேண்டும் என்பது எனது கணிப்பு! உங்கள் கணிப்பு என்ன?

மரு. தெய்வசிகாமணி

Related Posts

error: Content is protected !!