Exclusive

‘அனுக்கிரகன்’ திரைக்கதையில் புதுமை ; ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் !’

அனுக்கிரகன் என்றொரு பெயரில் ஒரு சினிமா தயாராகிறது . அப்படி என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருளாம். இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் அனுக்கிரகன். அதே சமயம் திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் ‘அனுக்கிரகன்’. இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .இவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். கூடவே பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை கற்றவராம்.

இப்படத்தில் கதாநாயகன் நாயகி போன்ற வழக்கமான ரோல்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் மூலம் புகழ் பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘நாடோடிகள்’ படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர். நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளவர். இன்னொரு முகம் தீபா.தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர். ‘ரெக்க’ படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா :பாடலில் வருபவரும் ‘மாரி ‘படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார் .மேலும் பல அனுபவமுள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .

இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் வினோத் காந்தி. இசையமைத்துள்ளவர் ரெஹான். படத்தில் ஆறு பாடல்கள் மூன்று பிரதான பாடல்களும் மூன்று தீம் சொல்லும் பாடல்களும் உண்டு. எடிட்டிங் SK. சதீஷ் குமார் .நடனம் ரமேஷ்கமல்.

நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் திரைகளில் உணர்வுகளைத் தொட வருகிறான் ‘அனுக்கிரகன்’.

aanthai

Recent Posts

ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…

6 hours ago

வீரன் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில்…

10 hours ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்!

கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர்…

22 hours ago

50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத்…

22 hours ago

மல்யுத்த வீரர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதா? – 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

அமித்ஷா ஆதரவாளரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்தவீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு 1983-இல் கிரிக்கெட்…

23 hours ago

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனை- ஐகோர்ட்உறுதி செய்து தீர்ப்பு!

சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை…

24 hours ago

This website uses cookies.