பாஜகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் ; அண்ணாமலை பேட்டி – வீடியோ!

பாஜகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் ; அண்ணாமலை பேட்டி – வீடியோ!

ரு ஆண்டாக கட்சிக்கு உழைத்த எனக்கு பெரிய பொறுப்பை தந்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது; பாஜகவின் காலம் எதிர்காலமாக இருக்கும்’’என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இன்று (16-7-2021) சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாயத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்த சில மாதங்களிலேயே மாநிலத் துணைத் தலைவராக பதவி உயர்வுப்பெற்றார். 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் அண்ணாமலை வெற்றிபெற இயலவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜக பதவி காலியானது.

இந்நிலையில் இந்த பதவில் பல்வேறு மூத்த தலைவர்களுள் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் கட்சியில் இணைந்து ஓராண்டு கூட நிறைவேறாத அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிya. விவரம் இதோ

தமிழக மற்றும் இந்திய ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. ஐ.டி. சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகங்கள் குறித்து பேசியதாக தவறாக சித்தரிக்கின்றனர்.அதாவது ஊடகங்கள் மீது பாஜகவிற்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தமிழக ஊடங்கள் குறித்து நான் பேசிய கருத்து திரித்துக் கூறப்பட்டுகிறது. பாரம்பரியமாக இருக்கும் ஊடங்களுக்கு முறையான அமைப்பு இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் கூறியது அதுவல்ல. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் பற்றியே கூறினேன்.

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதே பாஜகவின் நிலைப்பாடு; தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

ஒரு குடும்பம் ஒரு தலைவர் என மற்ற கட்சிகளைப் போல் கிடையாது பாஜக. கடைக்கோடியில் இருக்கும் ஒரு மனிதருக்கு பாஜக கொடுக்கும் அங்கீகாரம் தான் உண்மையான சமூகநீதி.

ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம். ஆனால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுவது நீட் தேர்வால் தடுக்கப்பட்டது நீட் தேர்வு வந்ததுக்கு பின்புதான் பணமில்லாத ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்வி பயில முடிகிறது; இதுவே உண்மையான சமூக நீதி என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

டெயில் பீஸ்

இக்கூட்டத்தின் போது கொங்குநாடு என அமைச்சரவை மாற்றத்தின்போது வெளியிடப்பட்ட தனது விவர குறிப்பில் ‘கொங்குநாடு’ என இடம்பெற்று இருந்தது தட்டசுப் பிழையே என மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!