முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த தமிழ் பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் முனைவர் பா. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.
பணி தொடர்பான விவரங்கள்:
பதவியின் பெயர் ;ஆசிரியர்(தற்காலிகம்)
மொத்த பணியிடங்கள் ;6 (பல்கலைக்கழக துறைகளில்)17 (உறுப்புக் கல்லூரிகள்)
கல்வித் தகுதி ; பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்), மற்றும் பிஎச்டி(அல்லது) பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்) மற்றும் NET/SLET/SET ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் ; ஒரு மாதத்திற்கு ரூ. 25,000 (தொகுப்பூதியம்)
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கல்விச் சான்றிதழ்கள் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ 20.12.2022 (மாலை 5 மணிக்குள்) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
முகவரி
முனைவர் பா உமா மகேஸ்வரி
இயக்குநர்,
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்.
அசல் விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dirtamildvt@annauniv.edu ஆகும்.
படத்தின் கதை என்னவென்றால் குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை…
டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ்…
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.…
போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது.…
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என்…
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா…
This website uses cookies.