அமித்ஷா மறுபடியும் சென்னை வருவார்- ஏன் தெரியுமா?

அமித்ஷா மறுபடியும் சென்னை வருவார்- ஏன் தெரியுமா?

அடுத்தாண்டுதான் தேர்தல் என்றாலும் ஜூரம் பரவத் துவங்கிவிட்டது என்பது பாஜகவின் மூத்தத் தலைவரும், நாட்டின் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் வருகை உணர்த்துகிறது. ஏறக்குறைய இன்றைய நிலையில் கூட்டணிகளில் மாற்றம் இருக்காது என்று கருதினாலும் அமித் ஷாவின் Plan A வெற்றியில் தான் Game Change இருக்கிறது.

அண்மையில் அமித் ஷாவின் சென்னை வருகையின் முக்கிய நோக்கம் ரஜினியுடன் சந்திப்பு என்று கூறப்பட்ட நிலையில் குருமூர்த்தி மட்டுமே அமித் ஷாவைச் சந்தித்தார் அமித் ஷாவின் திட்டம் தான் என்ன ?

அதை ரெண்டாக பிரித்து பார்க்க வேண்டும்.

எப்போதும்ம் Plan A இருந்தால் Plan B இருக்கும், அமித் ஷா பொறுத்தவரையில் இந்த பயணத்தில் Plan B மட்டும் தான் வெற்றி அடைந்து இருக்கிறது. இந்த Plan B என்பது கூட தற்காலிகமானது தான்.அவர்களோடு குறி Plan A ரஜினி தான்.அடுத்த மாதம் மறுபடியும் வருகிறார் அமித் ஷா. டிசம்பர் 5 க்கு பிறகு ரஜினியின் மூவ் பொறுத்து தான் Plan B அதிமுக கூட்டணி தொடருமா அல்லது Plan A ரஜினி ,அதிமுக ,பிஜேபி தனி தனியாக தேர்தலை சந்திப்பார்களா என்று தெரியும்.அதன் பின் தான் அமித் ஷாவை பற்றி பேச முடியும்.

ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் சாணக்கியர் அமித் ஷா இங்கே வெற்றி பெறுவது சுலபம் இல்லை என்பது நம்மை விட சாணக்கியர்கள் நன்கு அறிவார்கள். அதையொட்டி உருவானதுதான் தமிழ் கடவுள் முருகன் பெயர் கொண்டவர் வைத்தும் அதே சமயத்தில் பாஜக மீது இருக்கும் பட்டியல் இனத்திற்கு எதிரான கட்சி என்ற கருத்தியலை உடைக்க ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க பல வருட திட்டமிடல்தான் L முருகன். அதற்கு அச்சாரமாயிட்டது கந்த சஷ்டி விவகாரமும் அதன் பின் வேல் யாத்திரையும்.

அந்த கந்தசஷ்டி விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட நபர் என்று சொல்ல கூடியவர் பின்னணி யில் இயங்கியது பாஜக தான் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம் ,அது ஒரு ட்ரைலராக பார்த்தது பாஜக. பாஜக ஆடும் ஆட்டம் தான் என்று தெரிந்தும் மக்கள் அமைதியாக இருந்தது , எதையும் பாஜகவை எதிர்த்தே பார்த்து பழக்கப்பட்ட பாஜகவே ஆச்சரியமாக அதை வெற்றியாக எடுத்து கொண்டது. இதைதான் பாஜக வேல் யாத்திரை வெற்றி யாத்திரை என்று கொண்டாடு கிறது. முருகன் முப்பாட்டன் என்கிற கான்சப்டை அறிமுகப்படுத்திய சீமான் இதை எதிர்க்காமல் வேடிக்கை பார்க்கிறார்,

இந்த யாத்திரையால் சீமானுக்கு பின்னடைவு ஏற்படுமா என்று கேட்டால் இதை சீமான் ஏன் எதிர்க்க வேண்டும் ? முருகன் முப்பாட்டன் என்கிற கான்சப்ட் சீமான் அவர்கள் அறிமுகப் படுத்தவில்லை.அதை பின்னாளில் இருந்து செயல்படுத்தியவர்கள் முதலில் அணுகியது என்னை தான்.அதன் பின் தான் சீமான் அவர்களை வைத்து எடுத்து செல்லப்பட்டது.

பாஜக நினைப்பது போல் மக்கள் வேல் யாத்திரையை கொண்டாடுகிறார்களா ? இந்த வேல் யாத்திரை ஒரு அரசியல் கட்சியான பிஜேபி நடத்துகிறது. வேல் , முருகன் எல்லாம் தமிழ் மொழி தமிழ் இனம் சம்மந்தப்பட்ட ஒரு ஆன்மீக விஷயம். , இந்த தமிழ் மொழி தமிழ் இனம் சம்மந்தப்பட்ட தமிழர் கடவுளுக்கு தற்பொழுது என்ன நடக்கூடாதது நடந்து விட்டது ?

அதனால் இந்த வேல் யாத்திரையால் என்ன சரி செய்யப்பட்டது ?

இது எங்களுக்கும் தெரியவில்லை ,மக்களுக்கும் புரியவில்லை .

இதனால் ஒரு பெரிய மாற்றமோ அல்லது ஹிந்துத்துவக்கு எழுச்சி வந்ததாகவோ கருத முடியாது. சீமான் அவர்கள் பல இடத்தில் இதே போல் கடந்து சென்று விடுவது , சீமானுக்கு நல்லதோ இல்லையோ ஆன்மீகத்துக்கு நல்லது.

மொத்தத்தில் அமித் ஷா வருகை திமுகவினருக்கு ஜுரம் வந்ததோ இல்லையோ ரஜினிக்கு வந்தே விட்டது. இந்த அமித் ஷா டிசம்பர் 5 க்கு மறுபடியும் சென்னை வருகிறார். அப்போதும் ரஜினியின் மூவ் இதே போலிருக்குமா? என்பதை பொறுத்து தான் Plan B அதிமுக கூட்டணி தொடருமா அல்லது Plan A ரஜினி ,அதிமுக ,பிஜேபி தனி தனியாக தேர்தலை சந்திப்பார்களா என்று தெரியும்.

அது மட்டுமின்றி ம நீ ம நாயகன் கமல் முன் நகர்த்தும் திராவிட தத்துவம் இங்கே ஏற்கனவே அரசியல்ரீதியாக ஒரு வலுவான சக்தி.அதனால் கமலால் திராவிடத்திருக்கு பிளஸ் மைனஸ் அதிகம் வித்தியாசம் இருக்கப்போவது இல்லை என்பதை புத்திசாலி கமலும் அவரைன் பின்னணியில் இருந்து இயக்கும் சக்திகளுக்கும் நன்றாக புரியும்.

Bit Talk  சீனிவாஸ் திவாரி

error: Content is protected !!