அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தின் கேஷியரே இல்லாத புது கடை!
ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறேன்னு இனிமே கேக்க முடியாது. அமேசான் கோ என்னும் கடை இன்று சியாட்டிலில் திறந்திருக்கிறது. இந்த கடைக்கு பில் போட, பணம் வாங்க ஆளே கிடையாது. அப்ப எப்படினு கேட்பவர்களுக்கு….?
இந்த கடையில் நுழைய அமேசான் ஆப்ஸ் இருந்தா போதும். அந்த் ஆப்ஸில் உங்க கிரடிட் கார்ட் டீட்டெயில் ஏற்கனவே இருக்கும் என்பதால் கடையில் நுழையும் போது கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் கடைக்குள் செல்ல முடியும். அங்கே அடுக்கி வைக்கபட்டுள்ள பொருட்களை நம் தேவைக்கு ஏற்ப எடுத்து வெளியே வரும்போது ஆளில்லா செல் செகவுட் கவுன்டரில் பொருட்களின் பார்கோடு மூலம் ஸ்கேன் செய்து வெளியே வந்துவிடலாம். வெளியே வருவதற்குள் குறுஞ்செய்தி வரும் உங்கள் பர்சேஸ் இவ்வளவு, இதை உங்க அக்கவுன்ட் கிரடிட் கார்டில் கழிக்கபட்டது என விரிவாக சொல்லி விடும்.
ஸ்கேன் செய்யாத பொருட்களை தெரியாமல் எடுத்து வந்தால் அலார்ம் அடிக்கும் கேட்டில். இதன் மூலம் பல்லாயிரக்கணக்காண கேஷ்யர்கள் வேலை இழப்பார்கள். ஏற்கனவே வால்மார்ட் மற்றும் பல செல்ஃப் செகவுட்வசதி பல கடைகளில் இருக்கிறது இருந்தாலும் அது 10% மட்டுமே. அமேசான் 100% கடை – நோ கேஷ் ஒன்லி கார்டு அதுவும் ஆப்ஸில் பதியபட்ட ஒன்று இருந்தால் மட்டுமே பர்சேஸ்.
அப்ப இனிமே இது இந்தியாவுக்கு வந்தா 60 காசு சாக்லேட்டுக்கு பதிலா 2 ரூவா கொடுக்கும் அண்ணாச்சிகள், அம்பானி கடைகளின் புழைப்பு…..??!