தமிழில் கடை பேட்ட அமேசான்!- வாடிக்கையாளர்களை கவர திட்டம்!

தமிழில் கடை பேட்ட அமேசான்!-  வாடிக்கையாளர்களை கவர திட்டம்!

ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான அமேசான் இந்திய வர்த்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அனைத்து பண்டிகைக்கும் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு அதிரடி விலை சலுகைகளை அறிவிக்கும் அமேசான் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலம் வரவிருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியாவில் தனது இ-காமர்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் ஷாப்பிங் சேவை நாட்டின் மிகவும் பிரபலமான மொழிகளில் மட்டும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அமேசான் இந்தியாவில் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தலின் இயக்குனர் கிஷோர் தோட்டா, அமேசானின் இந்தியா ஷாப்பிங் அனுபவத்தை நான்கு புதிய மொழிகளில் கிடைப்பது “அமேசான் நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.