ஏர்டெல் ப்ரீபெய்ட் – மினிமம் 200 ஆகிறது!

ஏர்டெல் ப்ரீபெய்ட் – மினிமம் 200 ஆகிறது!

ப்போதைய காலக் கட்டத்தில் அத்தியாவசிய சேவையான டெலி போன் சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்களான வோடாபோன், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில் மீண்டும் தங்களது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போகிறதாம் . இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த முறை ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக அனைத்து விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அதிகமாக பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே இரு நிறுவனங்களின் ரீச்சார்ஜ் பயன்களும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை உயர்த்துவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து “5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் எங்கள் ஏர்டெல் உள்ளிட்ட எந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் மகிழ்ச்சியடையவில்லை. 5ஜி ரிசர்வ் விலையை 90 சதவீதம் குறைக்க வேண்டும் என்று ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தின. தொழில்துறையினர் ரிசர்வ் விலைக் குறைப்புக்கு எதிர்பார்த்தனர்; குறைப்பு இருந்தபோதிலும், அது போதுமானதாக இல்லை மற்றும் அந்த வகையில் ஏமாற்றமளிக்கிறது, ”என்று ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறினார்.

மேலும் எனது சொந்த எண்ணம் என்னவென்றால், இந்த வருடத்தில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும்” என்று கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!