ஏர் இந்தியா-வில் 13 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாயவிடுப்பு!

ஏர் இந்தியா-வில் 13 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாயவிடுப்பு!

தொடரும் ஊரடங்கால் முடங்கிப் போய் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தனது 13,000 ஊழியர்களில் தேவையற்ற சிலரை சம்பளம் இல்லாமல் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த கட்டாய விடுப்பு ஐந்து ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் பங்கு, திறன், செயல்திறன் மற்றும் உடல்நலம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் யாரை விடுப்பில் அனுப்பலாம் என ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் துறைத் தலைவர்கள் மற்றும் பிராந்திய இயக்குநர்கள் தங்கள் பரிந்துரை பட்டியல்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துறைத் தலைவர்கள் மற்றும் பிராந்திய இயக்குநர்களால் தொகுக்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தன் இறுதி முடிவை எடுப்பார். ஊதியமின்றி விடுப்பில் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான ஒப்புதல் தேவைப்படும்.

“இத்திட்டத்தின் கீழ் விடுப்பு பெறும் எந்தவொரு பணியாளரும் அரசு அல்லது பிற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைகளில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் நிறுவனத்தின் விதிமுறைகளின் படி விடுப்பில் செல்லும் ஊழியர்கள் அந்த காலக்கட்டத்தில் மருத்துவ மற்றும் போக்குவரத்து சலுகைகளை பெறலாம்” என ஏர் இந்தியா நிறுவனம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!